முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! கவிஞர் சல்மா, வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட நால்வர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு!
- உறியடி செய்திகள்

- May 28
- 2 min read

மணவை, எம்.எஸ் ராஜா@
ச. ராஜா மரியதிரவியம்...........
மாநிலங்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஜூன் 19-ம் தேதி நடைபெற்றும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.கழகம் சார்ப்பில் மாநிலங்களவை வேட்பாளராக கவிஞர் சல்மா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.!
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் 6 ஆறு ஆண்டுகள் ஆகும்.அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான தி.மு.கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச. தலைவர் சண்முகம், எம். எம். அப்துல்லா, மற்றும் தி.மு.கழக கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.!
இந்த நிலையில், காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான, தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.! அதன்படி, மாநிலங்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு ஜூன் 02 ஆம் தேதியும், ஜூன் 19ஆம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.!

இந்த நிலையில் மாநிலங்களவை தி.மு.கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.!
முன்னதாக தேர்தல் நேரத்தில் தி.மு.கழக கூட்டணியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, கட்சியின் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.!

அதன்படி, மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசனுக்கு பதவி வழங்கப்படுவது உறுதியாகி, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.!
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தி.மு.கழக வேட்பாளராக கவிஞர் சல்மா எளிய பின்னணி கொண்டவராக, சுற்றுப்புற கிராமங்களில் வேற்றுமையின்றி பழக கூடியவரவார் என்று, இன்றும் அப்பகுதியினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றார்கள்.!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் சல்மா. இவரது இயற்பெயர் ரொக்கையா மாலிக். அப்துல் மாலிக் என்வருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சல்மாவின் கணவர் தி.மு.கழக பாரம்பரிய பின்னணியை கொண்டவர்.இதன் காரணமாக சல்மாவும் கணவருக்கு ஆதரவாக அரசியலில் ஈடுப்பட ஆரம்பித்தார்.!
கவிதை உலகில் அவர் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை , ஒரு மாலையும் இன்னொரு மாலையும், பச்சை தேவதை, உள்ளிட்ட கவிதையின் தொகுப்புகள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து 2018,ம் ஆண்டு தி.மு.கழகம் சார்ப்பில் தந்தை பெரியார் விருது விழங்கி கவுரவிக்கப்பட்டார். பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி ) பேரூராட்சித் தலைவராக கவிஞர் சல்மா இருந்துள்ளார்.!

அதுமட்டுமின்றி கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில்தி.மு.கழக கூட்டணி சார்பில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டார்.!
அதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசின் சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கவிஞர் சல்மா தி.மு.கழக மகளிரணியில் பிரச்சாரக்குழு செயலாளராகவும் பணியாற்றினார். அதன் பின்னர், தற்போது செய்தி தொடர்பு பிரிவில் இணைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.!
இந்நிலையில், தி.மு.கழகம் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கவிஞர் சல்மா தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர், தி.மு.க முக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் நன்மதிப்பை பெற்ற கவிஞர் தற்போது நியமிக்கபடும், ராஜ்ய சபா உறுப்பினராக, பாராளுமன்றத்தில் அவர் முதல்முறையாக காலடி எடுத்து வைத்து, தி.மு.கழகத்தின் குரலாக எதிரொலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments