top of page
Search

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்! 20.கி.மீ.வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு! மக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெற்றா

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 31
  • 2 min read
ree

மணவை, எம்.எஸ்.ராஜா @ ச ராஜா மரியதிரவியம் .......


தி.மு.கழக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை வழியாக சென்றபோது வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர பகுதிகளில் 20 கி.மீ தொலைவிற்கு இருபுறமும் தொண்டர்களையும், பொதுமக்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.!


தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் நாளை ஜூன்.1. ஞாயிற்றுகிழமை தி.மு.கழகத்தின். பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ளது. தி.மு.கழக தலைவர். தமிழ்நாட்டின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.

ree

இந்நிலையில் தி.மு.கழகத்தின். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு. மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள், திமு.கழக பொதுசெயலாளர் துரைமுருகன். தி.மு.கழக முதன்மை செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. துணை பொது செயலாளர், வருவாய்துறை அமைச்சர், ஐ. பெரியசாமி, , தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், பி.டி.ஆர் தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, ஆ.ராசா, உள்ளிட்ட மண்டல பொருப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.!

!
!

இதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுகிலும் தி.மு.கழகத்தினரும், பொதுமக்களும், சிறுபான்மை மக்கள், பெண்கள் உள்ளிட்டவர்களும், உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகிலும் பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டு மக்களிடத்தில் தனது அன்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிபடுத்தியது .

தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதி வழியாக.

வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு . தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கபட்ட முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.!


ree

முன்னதாக, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் ரூ.30 லட்ச மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்சிக்கொடிகளை ஏந்தியபடி திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தார்கள் ! முதலமைச்சர் பொதுமக்களை சந்திக்க வசதியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது, ட்ரோன் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.!.


இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு புதூர் சாலையில் இருந்து உத்தங்குடி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும். முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் வழிநெடுகிலும் பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் தி.மு.கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேரூரையாற்று கிறார். என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.!

ree

ஜெய்ஹிந்த்புரம் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்க நடந்து சென்ற போது வில்லாபுரத்தில் பாரத மாதா, பாரதியார், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமணிந்தபடி சிறுவர்கள் நின்றிருந்தனர். அந்த சிறுவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினர். அப்போது முத்தமிழறிஞர் கலைஞரின் வேடம் அணிந்திருந்த சிறுவன் முதல்வரின் கண்ணத்தில் கிள்ளி முத்தம் கொஞ்சினான். உடனே அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பின்னர் சிறுவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.


இந்நிலையில் மதுரையில் நாளை (01.06.2025) நடைபெறும் திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வரும் 50 வயதிற்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும், கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page