முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்! சேலம் மாநாடு வரலாற்று திருப்புமுனை! அமைச்சர் கே .என்.நேரு பேட்டி!
- உறியடி செய்திகள்

- Nov 26, 2023
- 2 min read

முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டல்களின்படி சேலம் மாநாடு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தி.மு.கழக இளைஞரணி செயல்பட தொடங்கி அதன் முதல் மாநில மாநாடு, இன்றைய தி.மு.கழகத் தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழு தீவிர முயற்சியால், தி. மு.கழகத்தின் பால் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் திருநெல்வேலியில், 2007.ம் ஆண்டு நெல்லையையே உலுக்கும் வகையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.!

இதனையடுத்து தி.மு.கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 16. ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞரணியின் 2. மாநாடு, முத்தமிழறிஞர் கலைஞர், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் ஆகியோரால், திமுக, நிகழ்ச்சிகளை மிகுந்த காண்போரை பிரமிக்க மூட்டும் வகையில் மிகுந்த சிறப்பாக நடத்தி காட்டி, மாநாட்டு நாயகர் என்று பாராட்டி அழைக்கப்படும் தி.மு.கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக உள்ள சேலத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.!

இதனையடுத்து தி.மு,கழகத் தலைவர் முதல்வர், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் - ஆலோசனைகளின்படி
அன்றிருந்து தொடர்ந்து தனது துறைசார்ந்த அரசு. மக்கள் பணிகளுடன், சம்மந்த கட்சி நிர்வாகிகள், சார்பு
அன்றிருந்து தொடர்ந்து தனது துறைசார்ந்த அரசு. மக்கள் பணிகளுடன், சம்மந்த கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் ஒருங்கிணைத்து, பணிகளை முடுக்கிவிட்டும், இரவு-பகல் பாராது அமைச்சர் கே.என்.நேரு முழுவீச்சில் மாநாட்டுப் பணிகளில் நேரடியாக தீவிர கவனம் செலுத்தியும் வருகின்றார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இம்மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே அரசியல் வட்டாரத்திலும் பரப்பரப்புடன் பேசப்பட்டும் வருகின்றது.!

இந்நிலையில், சென்னை தி.நகரிலுள்ள அக்கார்டு ஹேட்டலில் திமு.கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், தி.மு.கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.26) காலை 11. மணிக்கு நடைபெற்றது. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி கருணாநிதி,
ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைமை கழக- மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.!

கூட்டத்தில் இந்திய ஒன்றிய அரசியல் வட்டாரமே மிகுந்த உன்னிப்பாக கவனித்துவரும் சேலத்தில் டிச.17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தி.மு.கழக இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்சி - தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் ப்பணி, கழக அரசின் மக்கள்நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார், தொடர்ந்து சேலம் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.!

இதனை தொடர்ந்து சேலம் இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தி.மு.கழக முதன்மைச்செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.!

கழகத் தலைவர். முதல்வர் தளபதியாரின் அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளின்படி கடந்த 6. மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கபட்டு, அதற்கான தீவிர பணிகள் நடைபெற்றும் வருகின்றது. தமிழகம் முழுவதும் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.!

கட்சியின் நீர்வாகிகள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பணிகள் குறித்தும், தேர்தலை சந்திக்க தயாராகயிருக்கும் வகையில் பணிகளின் தீவிர கவனம் செலுத்தவும் கழகத்தலைவர், முதல்வர் தளபதியார் அறிவுறுத்தல்கள் வழங்கி கட்டளையிட்டும் உள்ளார்.
அடுத்து கழகத்தின் முக்கியப் பணியாக சேலம் இளைஞரணி மாநாட்டை எழுச்சியோடு சிறப்பாக நடத்த உள்ளோம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக பொருப்பேற்றபின்னர் ஏராளமான இளைஞர்கள் தி.மு.கழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு, அவர் சுற்றுப்பயணம் பகுதிகளிலிருந்தும் புதிது புதிதாக இளைஞர்கள் கட்சியை நோக்கி வருவதை அனைவரும் அறிவார்கள்.!

முதல்வரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதுப்புதுத் திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகின்றது. இதுவும் இளைஞர்களை கழகத்தை நோக்கி பெருமளவிற்கு வரவழைத்துள்ளது. இத்தகைய இளைஞர் பட்டாளத்தை கட்டுக்கோப்பாக, திராவிட கொள்கை, உணர்வாளர்களாக்குவதற்காவும்,தான் இளைஞரணி மாநாட்டை இளைஞர்களை வழிநடத்தும் சிறப்பான மாநாடாக நடத்த வேண்டும் என்று தலைவர் தளபதியார் உத்தரவிட்டுள்ளார்.!

திருநெல்வேலி இளைஞரணி முதல் மாநாட்டை தொடர்ந்து இரண்டாவதாக சேலத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற டிச.17. ம் தேதி நடைபெறும், ஒரு நாள் மாநாடு என்பதால் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக, கழகத்தினர்களை ஒருங்கிணைத்துப் பணிகள் தீவிர படுத்தி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மாநாட்டு தினத்தில் காலை 9 மணிக்கு மாநாட்டு திடலில் கழக இருவண்ணக் கொடியை கழகத்துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி ஏற்றிவைக்கிறார். கழக மாணவர் அணிச்செயலாளர். எழிலரசன் எம்.எல்.ஏ.மாநாட்டு நிகழ்வுகளை தொடங்கிவைக்கின்றார். கழக முக்கிய பேச்சாளர்கள் பல்வேறு தலைப்பில் மாநாட்டில் உரையாற்றுகின்றார்கள். !

தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கழகத் தலைவர் முதல்வர் தளபதி சிறப்புரையாற்றுகின்றார்.
அரசியல் களத்தில் தி.மு.கழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றிலும். இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றிலும் முக்கிய திருப்பமாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமான மாநாடாக அமைய உள்ளது.
சுமார் 5 லட்சம் இளைஞர் அணியினர் பங்கேற்கும் விதமாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மிகுந்த எழுச்சியூட்டும் மாநாடாக இது அமையும், இதில் எல்லோருடனும் ஊடகத்துறையினரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.!
மணவை எம்.எஸ்.ராஜா....




Comments