முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வருகை! பாசனத்திற்கு கல்லணையிலும் தண்ணீர் திறந்து வைக்கின்றார்! அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
- உறியடி செய்திகள்

- Jun 14
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா@ச ராஜா மரியதிரவியம்.. தோகமலை ......
தஞ்சைமாவட்டத்தில் 15, 16 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சி களில் அவர் கலந்து கொள்கிறார்.! அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை.!

இந்த நிலையில் நேற்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை அமையும் இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிலை அமையும் இடத்திற்கான மாதிரி வரைபடத்தை பார்த்தனர். சிலையைச் சுற்றிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளிடமும் .தி.மு. கழகத்தினரிடமும் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோ.வி.செழியன் கேட்டறிந்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர், பா.பிரியங்கா பங்கஜம், காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் .ஜோஷி நிர்மல் குமார் , திருவையாறு சட்டமன்ற உறுப்பினர். துரை. சந்திரசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . இரா. இராஜாராம், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர். ஆர். தயாளகுமார், தஞ்சாவூர் கீழ்காவேரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர். எம். சண்முகம், திருச்சி நடுக்காவேரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் . எம். இளங்கோ, திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் , நித்தியானந்தம் உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார் . . யோகேஸ்வரன் . முருகானந்தம், மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.!

முன்னதாக தி.மு.கழக முதன்மை செயலாளர், மத்திய மண்டல பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தி குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது

முன்னோடித் திட்டங்கள் பல தந்து இந்திய நாட்டிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நம் கழக தலைவர் முதலமைச்சர் - தளபதியார், கல்லணையில் பாசனத்திற்குதண்ணீர் திறப்பு - இதனை தொடர்ந்து தஞ்சையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்த கொண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஜூன்.15.16. தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.!
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதல் அமைச்சர் தளபதியார் சாலை மார்க்கமாக வந்து
விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பூதலூர் வட்டத்திலுள்ள கல்லணையை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், சாலை மார்க்கமாக செல்லும் முதல் அமைச்சர் தளபதியார் தஞ்சை கலைஞர் அறிவாலயம் வழியாக பஸ்நிலையம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.!
அன்று இரவு தஞ்சையில் தங்கும் முதல் அமைச்சர் தளபதியார் மறுநாள் 16-ம் தேதி திருமணம் விழாவிலும், தொடர்ந்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தும். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றார். இதனையடுத்து மாலை சென்னை விமானம் மூலம் புறப்படுகின்றார்.
கழக தலைவர் - முதல் அமைச்சர் தளபதியார் கலந்து கொள்ளும் 2 நாள் நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னால் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அனைத்து சார்பு கழக அணியினரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.




Comments