முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!! மாவட்டச் செயலாளர்கள்தொண்டர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்!
- உறியடி செய்திகள்

- Aug 16, 2024
- 2 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் .....
மாவட்ட செயலாளர்கள் தொண்டாகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்! நிர்வாகிகள் புகார் மீது நடவடிக்கை உறுதி! கழக அரசின் சாதனைகள் மக்களை சென்றடைந்துள்ளது.! அவற்றை வாக்குகளாக பெறும் வகையில் பணியாற்றி,அடுத்த தலைமுறைக்கு கழகத்தை ஒப்படைக்கும் வகையில் கழகப் பணியாற்ற வேண்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை , தி.மு.கழக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.!
இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டார்கள்.!
அடுத்த மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக-வின் முப்பெரும் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 -40/40 திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில். தி.மு.கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டர். அதனை தி.மு.கழக பொருளாளர், மக்களவைக்குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்று கொண்டார்.!
கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர். நாடாளுமன்ற இரு அவைகளின் குழுத் தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, துணைப்பொதுச்செயலாளர், அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னால் ஒன்றிய அமைச்சர், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!
தொடர்ந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது....
நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் தி.மு.கழகத்தின் ஆட்சிதான்.!
200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நம்முடைய இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். அதனை வாக்குகளாக மாற்ற களப்பணி என்பது மிகவும் அவசியம்.ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.!
சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன.!

அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.. சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.!
அதன் மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர்.!
வெற்றி பெறுபவரே வேட்பாளர்.அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.!

முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.!
கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்.!
இவ்வாறு முதல்வர் கூறினார்.




Comments