top of page
Search

கோவை சர்ச்சை ! வானதிக்கு நெத்தியடி பதில் ! ஜிலேபி சாப்பிட்டார்னா குத்தமா? நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 14, 2024
  • 2 min read
ree

தோகமலை.

ச ராஜா மரியதிரவியம் ...........


கோவை அன்னபூர்ணா விவகாரம் பாஜக ஆதரவாளர், நடிகர் எஸ்.வி.சேகர் கண்டனம் பாஜகவில் தொடரப்போவதில்லை மேலும் சீனிவாசன் சமூகம் சார்ந்த ஒரு லட்சம் ஓட்டுகள் இனி பாஜவுக்கு கிடைக்காது, மது அருந்துவததாக கூறினால் தவறு, ஜிலேபி சாப்பிட்டார் என்றால் என்ன தவறு வானதிக்கு கேள்வி .!


ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக நேற்று முன் தினம் கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

ree

ரூ.2000 டிஜிட்டல் பரிவர்த்தனை.. சர்வீஸ் சார்ஜுக்கு 18% ஜிஎஸ்டி? நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம்

"ரூ.2000 டிஜிட்டல் பரிவர்த்தனை.. சர்வீஸ் சார்ஜுக்கு 18% ஜிஎஸ்டி? நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் "

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ree

அப்போது பேசிய கோவை அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

ree

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.


இந்நிலையில் கோவை அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக தனியார் இணைய தளத்தில் பேசிய நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இந்த விவகாரத்தை கடுமையாக கண்டித்து உள்ளதோடு இனி பாஜகவில் தொடரப்போவதில்லை என கூறியிருக்கிறார்.!

ree

இதுதொடர்பாக அவர் பேசியுள்ளதாக வெளியான தகவலில், அவர்,”அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். என்னை பொருத்தவரை மன்னிப்பு கேட்க வைத்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தவறு. ஒரு பெண்ணின் உணவு பழக்கம் குறித்து எப்படி பேசலாம் என கேட்கிறார்கள்.!


ஒருவர் மது அருந்துகிறார் அல்லது வேறு ஏதும் சாப்பிடுகிறார் என்று கூறினால் தவறு.. ஜிலேபி சாப்பிடுவார் எனக் கூறியதில் என்ன தவறு. மேலும் அன்னபூர்ணா ஹோட்டல் சீனிவாசனை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்தது யார்? வீடியோ எடுத்திருப்பதின் மூலம் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என தெரிய வந்திருக்கிறது. வீடியோவை எடுக்க வைத்தது நிர்மலா சீதாராமன் அல்லது வானதி சீனிவாசனா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.!


வாக்கு அரசியல் என்று வரும்போது ஒவ்வொரு வாக்குமே முக்கியம். அன்னபூர்ணா சீனிவாசனை இப்படி நடத்தியதன் மூலம் அவர் சமூகம் சார்ந்த ஒரு லட்சம் வாக்குகளை பாஜக இழந்திருக்கிறது. சீனிவாசன் பெருந்தன்மையுடன் மன்னிப்பே கேட்டிருந்தாலும் அவரது சமூகத்தினர் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக அண்ணாமலை வந்த பிறகு பூஜ்ஜியம் ஆகிவிட்டது.!

ree

கேந்திரிய வித்யாலயால அட்மிஷன் கேட்கும்போது எங்க போச்சு உங்கள் தமிழ் பற்று? நிர்மலா சீதாராமன் நறுக்

"கேந்திரிய வித்யாலயால அட்மிஷன் கேட்கும்போது எங்க போச்சு உங்கள் தமிழ் பற்று? நிர்மலா சீதாராமன் நறுக் "

செய்தியாளர்களை சந்திக்க தைரியம் இல்லை என்றால் பிரஸ்மீட் வைக்கக் கூடாது. அல்லது அறிக்கை வெளியிட்டு விட்டு சென்றுவிடலாம். ஆனால் பொதுவெளியில் பேசத் தெரியாமல் பேசக்கூடாது. வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கேட்பது போல அண்ணாமலை நடித்திருக்கிறார். அவர் வந்த பிறகு பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு கூட மரியாதை இல்லை. அனைவரையும் ஓரங்கட்டி விட்டு தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.!

ree

அதிமுகவில் இருந்து வந்த

மைத்தேரையன் ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் மீண்டும் அந்த கட்சிக்கு சென்று விட்டார். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. மோடி கேட்டுக் கொண்டதால் பாஜகவில் இணைந்தேன். இப்போது பாஜகவை விட்டு விலகுகிறேன். மீண்டும் மோடி அழைத்தால் பாஜகவுக்கு வருவேன். அண்ணாமலை இருக்கும் வரை பாஜக முன்னேற்றம் அடையாது” இவ்வாறு பேசியதாக தகவல்கள் வைரலாகியுள்ளது.!

ree

அன்ன பூர்ணா சீனிவாசன் வருத்தம் தெரிவித்து பேசும் வீடியோவின் பதிவின்படி, வானதி, நிர்மலாவின் பதிவுகள் பல்வேறு சந்தேகங்களையே எழுப்புகின்றது.

இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கேள்வியால், இது மேலும் வலுப்பெற வே செய்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சக்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page