கோவை : எடப்பாடி தேர்தல் பரப்புரை! தி.மு.க. மீது கடும் குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Sep 13
- 2 min read

முன்னாள் முதல்வர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது
தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில்.
எடப்பாடி பழனிசாமி, பேசியதாவது.
கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும், தொழில் நிறைந்த மாவட்டம் என்றும் புகழ் பெற்றிருந்தது அ.தி.மு.க. ஆட்சியில். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சியில் தொழில் சரிந்து ஒரு ஷிப்ட் மட்டுமே நடக்கிறது. இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். சிங்காநல்லூர் தொகுதியில் எல்.சி.5 ரயில்வே மேம்பாலம், ரிங் ரோடு அமைக்கும் பணி, எஃப்.ஐ.எஸ்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலம், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவை தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானப் பொருட்களான எம்.சண்ட், ஜல்லி, கம்பி, சிமெண்ட், செங்கல் ஆகியவற்றின் விலை நான்காண்டில் 200 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
சொத்து வரி உயர்வு: தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தி, வீட்டுக்கு 100% மற்றும் கடைக்கு 120% என உயர்த்தியுள்ளது.
: தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டதாகவும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மரணத்தின் விலை: வீல்சேர் கூட இல்லாத அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற சிரமப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டும் அளவுக்கு இருந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களை அவர் பட்டியலிட்டார். விமான நிலைய விரிவாக்கம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், அவிநாசி சாலை உயர் மட்டப் பாலம், திருச்சி சாலை ராமநாதபுரம் சுங்கம் உயர் மட்டப் பாலம், ஆவாரம்பாளையத்தில் இருந்து கணபதி செல்லும் சாலை ரயில்வே மேம்பாலம்.
அதேபோல், சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில் ஏற்காடு அமைத்தது, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் கருவிகள் நிறுவியது, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலாளிக்கு கைகள் பொருத்தி சாதனை படைத்தது போன்ற பல்வேறு சாதனைகளை அ.தி.மு.க. அரசு செய்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக, அ.தி.மு.க. ஆட்சியில் 52.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டதாகவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார். மேலும், "எங்கள் ஆட்சியில் தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிறுவனங்களில் 3% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்," என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆட்டோ வாங்க 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும், தீபாவளிக்கு ஏழை மக்களுக்குச் சேலை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். இறுதியாக, "அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்," இவ்வாறு அவர் பேசினார்..




Comments