top of page
Search

கோவை: ஜிஎஸ்டி விவகாரம் ! ஹேட்டல் அதிபருக்கு மிரட்டல் ! தி.மு.கழகம் துணை நிற்கும் ! கணபதி ராஜ்குமார் கண்டனம் !

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 14, 2024
  • 2 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம்....


ஜி.எஸ்.டி குறை தீர்க்கும் கூட்டத்தில் கொங்கு தமிழில் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கு பா.ஜ.க வினர் மிரட்டல் விடுத்து கோவை மக்களை அவமானப்படுத்தியது வன்மையானக் கண்டனத்துக்குரியது என்று தி.மு.க அவருக்கு துணை நிற்கும் கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் உறுதி.!

ree

ஜி.எஸ்.டி குறைதீர்க்கும் கூட்டத்தில் அழகாக கொங்கு தமிழில் கோரிக்கையை முன் வைத்த அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் மிரட்டப்பட்டதாகவும், அதன் மூலம் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர் எனவும் கூறி உள்ள கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த சம்பவத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன் சீனிவாசனுக்கு தி.மு.க துணை நிற்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ree

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ree

அப்போது பேசிய தி.மு.கழக மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு தமிழில் அழகாக தமது கோரிக்கையை பேசிய நிலையில் பா.ஜ.க-வினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். !

ree

மேலும், “சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி"யினால் தான் ஆனால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் தற்போது நடக்கிறது எனவும் பிஸ்கட்டிற்கு 18% ஜி.எஸ்.டி, தங்கத்திற்கு 3% ஜி.எஸ்.டி விதித்த போது அறிந்து கொள்ளலாம் இது யாருக்கான ஆட்சி” !

ree

அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா..? எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது !

ree

ஜி.எஸ்.டி-யால் 30 சதவீதம் தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.!


“பா.ஜ.க-வினர் கோவை மக்களை திட்டமிட்டே அவமானப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் மிரட்டப்பட்டதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்படுவதுடன் தி.மு.கழகம் அவருக்கு துணை நிற்கும்”!

ree

ஒன்றிய அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாரே தவிர அந்த சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை. !

ree

தொழில் அமைப்பினரின் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய தனக்கு அழைப்பு இல்லை ஆனால் கழகத் தலைவர் முதலமைச்சர் தளபதி பங்கேற்ற மாணவர்களுக்கான உதவிகளை வழங்கும் விழாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசலுக்கு முதல் வரிசையில் இருக்கை கொடுத்ததாகவும் ஆனால் பிரித்தாள்வதே இவர்களது வேலையாக உள்ளது. !


இவ்வாறு கணபதி ராஜ்குமார் எம்.பி. கூறினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page