கோவை : தமிழக உள்ளாச்சி பொறியாளர், உதவி பொறியாளர் பணிடங்கள் விரைவில் நிரப்படும்! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
- உறியடி செய்திகள்

- Aug 5, 2024
- 1 min read

தமிழக உள்ளாச்சிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை! மு தல் கட்டமாக 2.500 பணியிடங்கள் அண்ணாபல்கலைகழகத்துடன் இணைந்து. நிரப்பவும் நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அமைச்சர் கே. என். நேரு கூறினார்.
தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கணியூர் ஊராட்சியில், ஊஞ்சப் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் தலைவர், டாக்டர்.கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.,!

இந்நிலையில், தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு, நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு, அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் இன்று
அதற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்கள்!.

முன்னதாக
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இன்று ஆக,5. திங்கட்கிழமை, அங்கு ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்காவின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் கோயம்புத்தூர் மாவட்ட பொருப்பு - தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .சு.முத்துசாமி ஆகியோர் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்க.!



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கழக முதன்மைச் செயலாளர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, “கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகளுக்கு, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில், தி.மு.கழகத்தலைவர், தமிழக முதல்வர் தளபதி அடிக்கல் நாட்டினார்.!
முதல்வர் தளபதியாரின் வழிகாட்டல்கள், ஆலோசனைகளின்படி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.!

முதற்கட்டமாக 2,500 பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வுகள் மூலம், 15 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.!
கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைக்காக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.!
கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டணம் உயர்வு என்பது தவறு! நிலத்தின் மதிப்பு அடிப்படையில் தான் நிர்ணயக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.!.

கோவை மாவட்ட பொருப்பு -தமிழக வீட்டு வசதித்துறை - மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், சு.முத்துசாமி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் .
.நா.கார்த்திக். மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்கள்.!




Comments