கமிஷனர் அருண் அதிரடி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தலைமறைவான பாஜக, நிர்வாகி அஞ்சலை கைது!
- உறியடி செய்திகள்

- Jul 19, 2024
- 1 min read

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழங்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.!
தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையோருக்கு பணம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் , அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரௌடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலை, திடீரென தலைமறைவான நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல் ஆணையர் அருண் உத்தவுரப்படி ............
மிக தீவிரமாகபோலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.!

கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட கைது செய்யப்பட்டனா்.
கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.
கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.!




Comments