பொதுசிவில்சட்டம்மாநில உரிமை பாதிக்கும்! ஒரே இனம், நாடு என பா.ஜ. முயலுவதா? தி.மு.கழகம் கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- Jul 16, 2023
- 2 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா
பொது சிவில் சட்டமே கூடாது: திமுக
பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு போன்ற பல கேடுகளை இந்திய ஒன்றிய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும் என ஒன்றிய அரசுக்கு திமுக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.!
பொதுசிவில்சட்டம்மாநில உரிமை பாதிக்கும்! ஒரே இனம், நாடு என பா.ஜ. முயலுவதா? தி.மு.கழகம் கண்டனம்!
இது குறித்து தி.மு.கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது!
, 22வது சட்ட ஆணையம் 14.6.2023 அன்று பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவர்களிடம் கருத்து கேட்டுள்ளது. இதற்காக கடந்த 3.7.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திமுக சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் “பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. மாநில உரிமை மற்றும் பழங்குடியினர் உரிமைகளை பாதிக்கும்” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

பழங்குடியினரை பாதிக்கும் என்று திமுக தான் முதன்முதலில் எதிர்த்து- அதன்பிறகே நிலைக்குழுத் தலைவர், சட்ட அமைச்சர், மத்திய அரசு - பா.ஜ.க. என அனைவரும் பழங்குடியினர்களுக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று பேசி வருகிறார்கள். ஆனால் திமுகவைப் பொறுத்தமட்டில் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் இறுதியான- தீர்க்கமான கொள்கை பிரகடனம்.!
அதை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள விரிவான பதிலில், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை ஆதரித்து வந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் “ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு” என்ற கொள்கையின் விளைவாக ‘பொது சிவில் சட்டத்தை’ அறிமுகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.!
21வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதனடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானதுமல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்தது.
பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல.!
சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் நான் பார்க்க்வில்லை. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.
டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது, இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இதனைப் பின்பற்றலாம் என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், இந்த அரசு இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்மீதும் திணிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது!
. இந்திய வாரிசுரிமைச் சட்டம்-1954, மத நம்பிக்கையற்றவர்களுக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவான சட்டமாகும்.
மேலும் அடிப்படை உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் சட்டத்தையும் தி.மு.கழகம் ஏற்றுக் கொள்ளாது.
இவ்வாறு தி.மு.கழகம் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.!




Comments