சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய்! தமிழ் தாய்வாழ்த்து பாடலைபுறக்கணித்தாரா? நெட்டிசன்கள் விமர்சனங்கள்!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2024
- 2 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.! இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, நடிகர்விஜய் இந்த பாடலை பாடவில்லை என்று தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய், தமிழ்தாய் வாழ்த்தை புறக்கணித்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் வைரலாகியுள்ளது.!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது.!
இதனை தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியையும் விஜய் தொடங்கினார்.!
இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 300 இடங்கள் பிடித்திருந்த மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.!
இதன்முதல் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.!
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இதன் பாராட்டு விழா நடைபெற்றது.!

விழாவில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர்கள் குடும்பத்துடன், கலந்து கொண்டனர்.!
நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு, அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் அரங்கத்திற்கு வந்தார்.! அரங்கத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.!
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது.!


தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதில் முக்கியமானது, தமிழ்த்தாய் வாழ்த்து பொது நிகழ்ச்சிகளில் வாய்ப்பாடலாக பாடப்பட வேண்டும். இதற்காக பயிற்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். இசைத்தட்டுக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.!
ஆனால், இன்று நடிகர் விஜய் நடத்திய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைத்தட்டு கொண்டு இசைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.!
இது விதிகளை மீறும் செயல் என நெட்டிசன்கள் கொந்தளித்து பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.!
மேலும் பாடல் இசைக்கப்பட்டபோது விஜய் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடவில்லை என்றும், சினிமா பாட்டு என்றால் பாடியிருப்பார், தமிழ்த்தாய் வாழ்த்து என்பதால் புறக்கணித்துவிட்டார் என நெட்டிசன்கள் வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ளனர்.!
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்று, சால்வை அணிவித்தும், பரிசுப்பொருட்கள் வழங்கியும், உற்சாகப்படுத்தியதுடன்.

மேலும் பாராட்டு பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் நடிகர் விஜய் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார்கள்.!
இந்நிலையில் நடிகர் விஜய் மாணவி ஒருவரின் தோளில் சால்வை அணிவித்து அவரின் தோள் மீது கைப்போட்டபடி போட்டோ எடுத்தார்.!
இந்த வேளையில் திடீரென்று மாணவி விஜயிடம் கோரிக்கை வைத்தபடி தனது தோள் மீது இருந்த அவரது கையை எடுத்தார்.!
அதன்பிறகு அவரும், அவருடன் வந்தவரும் விஜயின் இருவரின் கையையும் கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் புன்சிரிப்புடன் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் சொல்வது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.!
தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஜய், அரசியலில் நல்ல தலைவர்கள் இல்லை என்றும், போதை பொருள்கள் நடமாட்டம் என்றும் பேசியதும் ஊடகங்களில் பேசும் போருளாசியுள்ளது.!
ஊடக வெளிச்சத்திற்காக, பாஜக அண்ணாமலை பாணியை நடிகர் விஜய்யும் பின்தொடர்கிறாரா!
என்னடா இது சோதனை!




Comments