டிச.6. நாளை நினைவு நாள்! அண்ணல் அம்பேத்காருக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை! மேயர் அன்பழகன் அறிக்கை
- உறியடி செய்திகள்

- Dec 5, 2023
- 1 min read

திருச்சியில் நாளை சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் நினைவுநாள்! அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை! மேயர் மு.அன்பழகன் அறிக்கை!
நாளை டி.ச.6.புதன்கிழமை சட்டமாமேதை, அண்ணல் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நினைவுநாள் நாடு முழுவதும் அனுஸ்டிக்கபடுகின்றது. ஒன்றிய, மாநில அரசுகள், அரசு அலுவலகங்கள், மற்றும்அரசியல் கட்சிகள். பொதுநல அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றது.!
திருச்சி மாநகர தி.மு.கழகச் செயலாளர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் நினைவு நாளையெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.!

நாளை. டிச O6. புதன்கிழமை சட்டமேதை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சட்ட மேதை டாக்டர் BR அம்பேத்கர்.
திருவுருவ சிலைக்கு காலை சுமார் , 8 மணியளவில் தி.மு.
கழக முதன்மை செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு-நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாநாட்டு நாயகர்அண்ணன் கே.என்.நேரு அவர்களின் தலைமையில், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர், க.வைரமணி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.!
எனவே, இந்நிகழ்வில் மாநில,மாவட்ட, மாநகர, கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர், நிர்வாகிகள் மற்றும்,மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், செயல் வீரர்கள், கழகமூத்த முன்னோடிகள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு செய்தி அறிக்கையில் திருச்சி மாநகர தி.மு.கழகச் செயலாளர். மேயர் மு. அன்பழகன் அழைப்பு விடுத்து கூறியுள்ளார்!




Comments