டெல்லி: இரு அவைகளின் தலைவர் கனிமொழி கருணாநிதி! திராவிட சகாப்தம்! ஒரு வரலாற்று பார்வை!
- உறியடி செய்திகள்

- Jun 13, 2024
- 3 min read

மணவை எம்.எஸ்.ராஜா @
ச. ராஜா மரியதிரவியம் .......
டெல்லி இரு அவைகளின் தலைவரானார். திராவிடசகாப்தம் கனிமொழி கருணாநிதி ஒரு வரலாற்று பார்வை!

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.!

மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி293 இடங்களை பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது.!
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை
நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இதுகுறித்து அவர் வெளியிட்ட . பத்திரிக்கை செய்தி குறிப்பில் :
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தி.மு.கழக குழு தலைவராக, கட்சியின் துணை பொதுச் செயலாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதியை அறிவித்தார்!,
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி, எம்.பி.
என்னை இந்த பொறுப்புக்கு தேர்வு செய்ததற்காக கழகத் தலைவர் முதல்வர் தளபதியாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.!

தி.மு.கழகம் எப்போதும், எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் தன்னுடைய கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. இதுதான் கழகத்தின் வரலாறு.!
10 ஆண்டு காலமாக பாஜகவுடைய எத்தனையோ மக்கள் விரோத மசோதாக்களை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். முத ல்வரின் காட்டல்களின் படியே மக்களை, இந்த நாட்டை,இந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை, சமூக நீதியை காக்கக்கூடிய வகையிலேயே தி.மு.கழகத்தின் செயல்பாடுகள் இனியும், எப்போதும் தொடர்ந்து இருக்கும்.!

இதைத்தான் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டின்முதல் அமைச்சர், கழகத்தலைவர் தளபதியார் எங்களுக்கு வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து, சமசமில்லா வெளிப்படைத்தன்மையுடன், ஒரே நிலைப்பாட்டில் முதல்வரின் குரலாக நாங்களும் தொடர்ந்து டெல்லியில் குரல் எழுப்பியும், வலியுறுத்தியும் போராடிக் கொண்டிருக்கிறோம்.! என்று கூறினார்.!
கனிமொழி திராவிட சகாப்தம்.!

கவிஞர் கனிமொழி கருணாநிதி, இளம் வயது முதலே சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். பல்வேறு இலக்கிய நிகழ்வு கூட்டங்களில் கலந்து கொண்டு முத்திரை பதித்துள்ளார்.. கருத்து என்னும் இணைய தளத்தையும் நடத்தி வருகிறார்.!
முன்னதாக தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார்.! தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.
சிகரங்களில் உறைகிறது காலம்
அகத்திணை
பார்வைகள்
கருக்கும் மருதாணி
கருவறை வாசனை
இவரது இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
சிலப்பதிகாரம்
தொகு
பாம்பே ஜெயஸ்ரீயுடன் அதே பெயரில் ஒரு தமிழ் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட சிலப்பதிகாரம் , ஒரு பெண் பொருள் என்ற தலைப்பிலான தயாரிப்பில் கனிமொழி பணியாற்றியுள்ளார் .!
இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார்.

இந்நிகழ்வுகளில் அழிவை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடுகள், கிராம கலைகளை மீட்டு தெடுக்கும் பணியினை திறம்பட மேற்கொண்டு தொடர்புடைய கலை குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்தார்.!
ஈழ தமிழர்கள் மீது மாறா பற்று கொண்ட இவர் தமிழினப் படுகொலைக்கு எதிராக, சமரசமில்லா கடுமை கண்டன குரலையும் முன்னெடுத்தார் கவிஞர் கனிமொழி கருணாநிதி,!

மேலும் சமூக விழிப்புணர்வு, தமிழர்களின் பண்பாடு பண்டைக்கால நாகரீகம், இலக்கியம், திராவிட பண்பாடுகள் குறித்து பல்வேறு காலகட்டங்களில் குறும்படம் இயக்குவதிலும் மிகுந்தஆர்வம் கொண்டவர்.!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார் .!

2007 ஜூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.!
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த 17 வது,இந்திய மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.!


2019 தூத்துக்குடி மக்களவை வெற்றி பெற்று மோடியின் அரசின் மக்கள் விரோத போக்கினையும், தமிழர்கள் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன், வளர்ச்சி, மொழி. இனத்திற்காக வாய்ப்புகள் கிடைத்த பல்வேறு காலகட்டங்களிலும் ஒன்றிய அரசிடம் கடுமையாக குரல் எழுப்பி வலியுறுத்தியும் வந்தார், இவரின் கட்சிப்பணி - மக்கள் பணியை மேலும் உற்சாக படுத்தி வலுசேர்க்கும் வகையில், கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைப்பொதுச் செயலாளராகவும் நியமனம் செய்தார்.!

தி.மு.கழக மக்களவை குழு துணை தலைவராகவும் பணியாற்றி வந்த இவர்.
இடைவிடாது, தொடர்ந்து தூத்துக்குடி மக்களவை தொகுதி வளர்ச்சிக்காகவும் சிறு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், மீனவர்கள், சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள், இளைய தலைமுறையின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், தனது பணிகளை முன்னெடுத்த கவிஞர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடியை தனது தாய்வீடாகவே பாவித்து பணிகளை முன்னெடுத்த காரணத்தாலும், தன்னை தேடி வருபவர்களிடமும், தி.மு.கழகம். உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தொகுதி மக்களிடமும் எதார்த்த, மனிதநேயத்துடன், மிக எளிமையாக நேரடி தொடர்பும் கொண்டார்.!



கடந்த மே 2007 - 2013 இல் ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்வு செய்யபட்ட கவிஞர்கனிமொழி கருணாநிதி அவையில் திமுகவின் தலைமைக் கொறடாவாகவும், மேல்சபையில் தமிழக அரசின் குரலாகவும் ஒலித்து வந்தார்.!
2019-ம் ஆண்டு நடைபெற்ற 17-வது மக்களவைக்கு தூத்துக்குடியிலிருந்து அந்தத் தொகுதியின் முதல் பெண் எம்.பி.யாக கனிமொழி கருணாநிதித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது!.


மேலும் கனிமொழி முறையே ரசாயனங்கள் மற்றும் உரங்கள் மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.!
இவர் தி இந்து நேஷனல் பத்திரிகை ஊழியர் சங்கத்தின் தலைவர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் இவர்தான்.!

திமுக மகளிரணி செயலாளர்
திமுகவின் மகளிர் அணிச் செயலாளராக இருந்த இவர், பெண்களை அரசியலுக்கு வர ஊக்குவித்தும் வருகிறார். மகளிர் பிரிவின் மாவட்ட அளவிலான அலுவலகப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.!


மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி டெல்லியில் பேரணியும் நடத்தியவர்,
சிறு நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு முழுவதும் 'கலைஞர் 85' என்ற பதாகையின் கீழ் வேலை வாய்ப்பு கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான திமுக முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்கிறார் .!

தமிழகம் முழுவதும் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்தவும் திட்டமிட்டார் .!
நடந்து முடிந்த 2024, 18 வது ,நாடாளுமன்ற தேர்தலில், இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்யுமளவுக்கு, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் வெற்றிப் பெறச் செய்துள்ளார்கள்.!

டெல்லி நாடாளுமன்ற இரு அவைகளின் தி.மு.கழகத் தலைவராக பணியாற்ற வரும் ஜுன் 18 ம் ந்தேதி செல்லும் கனிமொழியுடன், நாடளுமன்றக்குழுத்தலைவராக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக
தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும்,
மாநிலங்களவை குழு தலைவராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவை குழு துணை தலைவராக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.!

முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய தி.மு.கழகத்தலைவர்,தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்கவும் யிருந்த போதும், தற்போதைய தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சோதனையான காலகட்டங்கள்போதெல்லாம், மாறா பற்றுடன், உண்மையான நேசத்துடன், தனக்கு ஏற்பட்ட இன்னங்களுக்கும் துன்பங்களுக்கும் இடையே மனவலிமையோடும் உறுதியோடும் இன்றும் கழக வளர்ச்சி ப்பணிகளையும், அரசின் செயல்பாடுகளையும் முன்னெடுத்தும் செல்கின்றார். கவிஞர் கனிமொழி கருணாநிதி.!

இந்நிலையில் தி.மு.க.வினர், மகளீர் அணியினர் - சார்பு அமைப்பினர் பலரும் இவர் மீது கொண்ட அன்பால், 2024. நாடாளுமன்ற உறுப்பினராக தூத்துக்குடியிலிருந்து வரலாற்று முக்கியத்துவமிக்கவெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் மக்கள் பணியாற்றச்செல்லும் கவிஞர் கனிமொழி
கருணாநிதியை வாழ்த்தும் வகையில், ..........

நாடாளுமன்றத்தில் தெறிக்க விடாலாமா?
என்றும். மேலும் பல்வேறு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மீம்ஸ் சுகளையும் உற்சாகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்தும் வருகின்றார்கள்.!




Comments