டெல்லி: வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா! மனித இனத்திற்கே எதிரானது! கனிமொழி கருணாநிதி கடும் குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- Aug 9, 2024
- 3 min read

வக்ஃப் வாரிய சட்டதிருத்தம்! சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கே எதிரனாது கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் கடும் குற்றசாட்டு! எதிர்கட்சியினரும் கண்டித்து பேசினார்கள்!
மக்களவையில்
கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்த புதிய திருத்த மசோதாவின்படி வக்ஃப் வாரியத்தில் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், இந்தச் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மசோதாவை தாக்கல் செய்த பின் உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இதில் முதலில் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். மத உரிமை மீதான நேரடித் தாக்குதல். நாங்கள் இந்துக்கள். ஆனால் அதேசமயம் மற்ற மதங்களின் நம்பிக்கையை மதிக்கிறோம். வக்ஃப் மசோதா மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல்களுக்காகவே பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த முறை இந்திய மக்கள் உங்களுக்குத் தெளிவாகப் பாடம் புகட்டினார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. இது கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல்.

இந்த மசோதா மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்ஃப் ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை திணிக்கிறார்கள். இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். அடுத்து நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு சட்டம் கொண்டுவருவார்கள். பிறகு ஜைனர்களுக்கு.. இப்படியே இது நீளும். இந்திய மக்கள் இப்போது இந்த மாதிரியான பிரித்தாளும் அரசியலை மதிக்கமாட்டார்கள்" என்று கடுமையாக எதிர்த்து பேசினார்.!

தொடர்ந்து தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத்தலைவர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் . கனிமொழி கருணாநிதி பேசியதாவது!,
“வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா, முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல; மனித இனத்துக்கே எதிரானது. அரசியல் சாசனத்தின் 30-வது பிரிவை நேரடியாக மீறுகிறது இந்த மசோதா. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர்கள்.
எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்?

ஓரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும்? அரசு சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல” இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.! .
தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே பேசுகையில், “, இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாக அறியவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டோம். இது அரசாங்கத்தின் புதிய வழியா?. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில். நாங்கள் எங்களின் மக்களுக்கான வேலையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்.! தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மசோதாக்களை கசியவிடுவதற்கு முன் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.!
இந்த மசோதாவை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். அல்லது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். ஆலோசனைகள் இல்லாமல் மசோதாவை திணிக்க வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்தார்.!

கேரள எம்பி என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், “நீங்கள் வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் கவுன்சிலை முழுவதுமாக அதிகாரம் இழக்க செய்கிறீர்கள். அந்த அமைப்பை முற்றிலும் சிதைக்கிறீர்கள். இது அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த மசோதா நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், இது கண்டிப்பாக முறியடிக்கப்படும் என்று இந்த அரசை நான் எச்சரிக்கிறேன்" என்றார்.!
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மற்ற மத அமைப்புகளில் மாற்று மதங்களை சார்ந்தவர்கள் உறுப்பினராக இல்லை. அப்படியிருக்கும்போது வக்ஃப் அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது ஏன்? அதனால் என்ன பயன்?. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு பாஜக தங்களது ஆதரவாளர்களை திருப்திப்படுத்த வக்ஃப் மசோதாவை கொண்டு வந்துள்ளது" என்றார்.!

அசாதுதீன் ஒவைசி கூறுகையில், "வக்ஃப் திருத்த மசோதா, அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 விதிகளின் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது; தன்னிச்சையானது. இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு இந்த சபைக்கு தகுதி இல்லை. இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம், இந்த தேசத்தை பிளவுபடுத்தும் வேலையை மத்திய அரசு செய்கிறது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா சான்றாகும். ஒரு சொத்தை வக்ஃப் நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது?" என்று கேள்வி எழுப்பினார்.!

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும், உள்நோக்கத்தோடு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இது இந்திய உணர்வோடு வாழும் இஸ்லாமியர்களை அந்நியர்கள் போல காட்டும் முயற்சி. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்” என்று பேசினார்.!
இறுதியில், “ மசோதாவில் உள்ள விதிகள் மத சுதந்திரத்தில் தலையிடவோ அல்லது அரசியலமைப்பை மீறவோ இல்லை. எனினும், இந்தச் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.!
வக்ஃப் சொத்துகள்: நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன!.

இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன் கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிக்க, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.!
என்பது குறிப்பிடதக்கது.!




Comments