போக்குவரத்துத்துறை பென்சன் - டி.ஏ.விவகாரம்! அதிமுக, இரட்டை வேடமா?அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
- உறியடி செய்திகள்

- Jul 26, 2024
- 1 min read

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வழங்கபட்ட பென்சன், டி.ஏ.வை நிறுத்தியது அதிமுக ஆட்சி! இப்போது கொடுக்க வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டு கூறுகிறார் பழனிசாமி.! அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு!
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் புதிய பேருந்துகளை அரியலூர் மாவட்ட தி.மு.கழகச்செயலாளர், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: .

தற்போது 685 பேர் பணிக்கு புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட பிறகு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள் விலக்கப்பட்டார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் அந்த பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும்.!
கலைஞர் கொடுத்த பென்ஷன், டிஏவை நிறுத்தியது அதிமுக எடப்பாடி ஆட்சி. அவர்களே நிறுத்தி விட்டு போனதை தற்போது அவர்களே கொடுக்க வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டு கூறுகிறார்கள்.!

இடைப்பட்ட காலத்திற்கு மொத்தமாக கொடுக்க வேண்டுமா, இல்லையா என்பதை வழக்காக நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் வழக்கு நிலுவையில் இருக்கிறது.!
பென்ஷன், டி.ஏ, வை ,வழங்க வேண்டும் என்பதில் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.!
இவ்வாறு அவர் கூறினார்.




Comments