top of page
Search

கடமை தவறிய காவல் துறை! கள்ளக்குறிச்சியில் காவு வாங்கபட்ட உயிர்கள்! சிலுவையை சுமக்கும் அரசு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 21, 2024
  • 3 min read
ree



கடமை தவறிய காவல் துறை

காவு வாங்கபட்ட உயிர்கள்.!

கதரும் கள்ளக்குறிச்சி.!


சிலுவையை சுமக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!


“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

ree

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அரசு செய்தி குறிப்பில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.!

ree

மேலும்

“உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.!


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமலிருக்கவும்,இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.!

ree

இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என்றும் அரசுஅறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!


எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்.!

.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

அதுதான் பொருத்தமாக இருக்கும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். வாக்களித்த மக்களோ, நாட்டு மக்கள் மீதோ அவருக்கு கவலை இல்லை” என்று கடுமையாக சாடினார்.!

ree

உயிரிழப்புக

“கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.!



“கள்ளச் சாராயத்தைத் தடுக்கத்தவறிய திமுக, அரசு வட மாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச் சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டும். இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும்,” என்று சீமான் சாடியுள்ளார்.


கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்று பாமக வலிறுத்தியுள்ளது.!

ree

“கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்று பாமக வலிறுத்தியுள்ளது.


கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து, தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

“கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து, தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.!

ree

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.!

ree

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனும் கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த சம்பவம் போன்று இனி எங்கும் நடக்காதவாறு நடவடிக்கைகள் துரிதபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.!


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.!


அத்துடன், பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.!

ree

தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.!


காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.!

ree

ஆக இவர்களின் ஒரு புள்ளியில் இணையும் கருத்து!


காவல் துறை - வருவாய்துறையே முழு பொருப்பு!

தி.மு.கழக உணர்வாளர்கள், சமூக நீதி செயல்பாாட்டாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் குற்றசாட்டு!


தமிழ்நாடு காவல் துறையில் எல்லோரும் கெட்டவரில்லை தான்!


அதே சமயம் இச்சம்பவ சமூக விரோதிகள், கொலைகார பாதகர்கள் உள்ளூர் போலீஸார் உளவுத்துறையினருக்கு நிச்சயம் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை!


இது தெரிந்தும், ஸ்டேசனுக்கு ஸ்டேசன் நல்லவர்களாக இருக்கும் போலீஸார் குற்ற சம்மவங்களை ஊக்குவிக்கும் போது தடுக்கவோ - காவல் குற்றவாளிகளுக்கு எதிர்நிலைப்பாடு எடுக்கவோ அந்த ஒரு சில நல்லவர்களுக்கு போதிய அடிப்படை உரிமை, பணி பாதுகாப்பு உள்ளிட்டவைகள் இல்லாததுதான் இது போன்ற சம்பவங்களுக்கான காரணமாக அமைந்து விடுகின்றது.!


கஞ்சா, தடை செய்யபட்ட லாட்டரி, சந்து மதுக்கடைகள், சீட்டாட்ட சிறப்புகள், உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களை போலீஸாரா ஊக்கபடுத்தி, சம்மந்தபட்ட காவல் நிலையங்களிலே ஆவணங்களாக பராமரித்து மாதமாமுலை பெற்றுக் கொண்டு பெயருக்கு ஒரு சில பெட்டி வழக்குகளை போட்டு வருவது கரூர், உள்ளிட்ட பிற பெரும்பாலான மாவட்டங்களில் இன்றைக்கும் நடந்து வருவதும், இதனை பெற வேண்டியதை மாதமா மாதம் பெற்றுக் கொண்டு உறவுத்துறையினரும் கண்டும் காணாமல் ஊக்கப்படுத்துவதுதான் ஆட்சியாளர்கள் கள்ளக்குறிச்சி போன்ற சமூக விரோத செயல்பாடு சமபவங்களுக்கு பதலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.!


காவல் பணியில் குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல் குற்றவாளிகள், உடந்தையாக செயல்படும் வருவாய்துறையினர், உள்ளிட்ட தொடர்புடைய அரசு பிறதுறையினர் மீது மக்கள் நலனுக்காக தமிழக முதல்வரின் சாட்டை இனியாவது சூழலுமா?


என்று கொதித் தொழுந்து கூறுகின்றார்கள்.தி.மு.கழக உணர்வாளைகள் - சமூக நீதி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள் .!


பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.


உறியடி - செய்தி டீம்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page