அமித்ஷா தமிழிசையை கண்டித்தாரா? அண்ணாமலை போட்டு கொடுத்தாரா? வலு பெறும் கண்டனக்குரல்கள்!
- உறியடி செய்திகள்

- Jun 12, 2024
- 2 min read

விஜயவாடா, சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷாவால் கண்டிக்கப்பட்டாரா தமிழிசை!
வழக்கம் போல போட்டு கொடுத்தார அண்ணாமலை! தமிழிசைக்கு பெருகும் ஆதரவு!
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவத்துக்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் உடனே விலக வேண்டும் எனவும் கேரளா காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.!

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். பின்னர் தெலுங்கான ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை (அண்ணாமலையை) வார்ரூம் வாயிலாக உட்கட்சியினர் மீது தனி மனித தாக்குதல், சமூக விரோதிகளை கட்சியில் இணைத்தது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைவெளிப்படையாகவே தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்து வந்தார்.!

இதற்கு அண்ணாமலை தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது.
கட்சியின் மீது மக்களிடம் அவ நம் பிக்கை, நம்ம கமற்றத்தன்மை அதிகரித்து, பிளவு ஏற்படக்கூடாது என்கிறா ரீதீ யில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையின் கண்டிப்பு கட்சியின் இன்றையலுக்கும் தற்போதைக்கும் தேவையான ஆரோக்கிய விசயமாகவே பெரும்பாலான பாஜக வினரால் பார்க்கப்பட்டது.!

இந்நிலையில் விஜயவாடாவில் இன்று ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் செய்கை மூலம் வணக்க கூறிவிட்டு நகர்ந்தார்.!
ஆனால் அமித்ஷா வோ, பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம் என்றும் பாராமல் தமிழிசையை கையை அசைத்து அழைத்தார். அப்போது, கடுமையான முகத்துடன் கை விரல்களை உயர்த்தி கண்டிப்புடன் தமிழிசையிடம் பேசினார். என்று கூறப்படுகின்றது.!

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அல்லது சமாதானம் சொல்லும் வகையில் தமிழிசையும் அமித்ஷாவிடம் பேசினார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக, வில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும், தமிழ்நாட்டிலும், கடும் சர்ச்சையையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.!
ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொதுமேடையில் 10 ஆண்டுகள் உள்துறை அமைச்சராகவும், தற்போது மீண்டும் அதே பதவியில் நீடிக்கும் அமித்ஷா இப்படி பகிரங்கமாக கண்டிக்கலாம? என்பது விமர்சனம் வைப்போரின் கருத்தாக வே வைரலாகிவரும் நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸும், தமிழக அரசியல் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ளனர்.!

கேரளா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பெண்களை பாஜக எப்படி இழிவாக நடத்துகிறது என்பதற்கு இதுதான் சான்று. கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இத்தகைய அவமானங்களை தாங்கிக் கொள்ளாக் கூடாது என தெரிவித்துள்ளது.!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னால் ஐ. ஏ.எஸ். அதிகாரி பாண்டியனையும் ஒட்டுமொத்த தமிழர்களையும், வாக்கு அரசியலுக்காக திரடர்களாக குறி வைத்து பேசிய மோடி உள்ளிட்ட பாஜகவின் விஷம பிரச்சாரம் செய்த விவகாரத்தின் சர்ச்சை முடிவுக்கு வரும் முன்னே தமிழிசைக்கு நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டின் கடும் அதிர்ப்தியை பாஜக மீது மேலும் அதிகபடுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.!

பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, மருத்துவரான தமிழிசை சுமார் கால் நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு அரசியல்கள சமதளத்தில், பல்வேறு ஆகச்சிறந்த ஆளுமைகளுடன் . சரிசமாக பாஜக, வை தமிழ்நாட்டில் வேறுண்ட செய்தவர் என்பதும் ஆட்சி அதிகாரம் தன் கையிலிருந்தும், அவற்றை உதறி தள்ளிவிட்டு கட்சிப் பணிகளுக்கு தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்து, தான் போட்டியிட்ட தொகுதி மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதாரவையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.!




Comments