top of page
Search

முதல்வருக்கு தெரியாமல் பஸ்கட்டணம் உயர்வா? அன்பு மணியிடமே கேளுங்கள்! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 15, 2024
  • 2 min read
ree

தோகமலை,

ச.ராஜா மரியதிரவியம்....


முதல்வர், போக்குவரத்து க்கழத்திற்கு தெரியாமல் பஸ்கட்டணம் உயர்வா? சொன்ன அன்புமணியிடமே கேளுங்கள்! அமைச்சர் சிவசங்கர் பேட்டி!


கூடுதல் கட்டணம் குறித்து ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் தற்போது குறைந்துள்ளது, எந்த ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிச்சை !


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில், அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.!


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அமைச்சர் சிவசங்கர், கூறியதாவது.


கழகத் தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார்ஆணையின் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லா மக்களிடம் சமமாக அமர்ந்து உணவருந்த சமபந்தி நடைபெற்றது.

ree

இந்த நிகழ்வு மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற நிலையில், இன்று மக்களுடன் அமர்ந்து உணவருந்தினோம். தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி இன்று ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்திருக்கிறார். நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரியளவு கூட்டம் இருந்தது. ஆனால் யாருக்கும் எந்த இடையூறோ வேறு பிரச்சினையும் இல்லாமல், சிரமங்களின்றி பேருந்துகளில் பயணம் செய்தனர்.!


ஆம்னி பேருந்துகள் மீதான விதிமுறைகள் குறித்த புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது, அதே சமயம் எந்த ஆம்னி பேருந்துகளில் முறைகேடுகள் நடக்கிறது என்று தெரிவித்தால் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்பேன்.!


இப்போது நாம் ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகிறோம், நம் ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் விரைவில் வரவுள்ளது.!


தற்பொழுதும் பொதுமக்களிடம் இருந்து புதிய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளோம். தாழ்தள பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைப்படி வாங்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் குறுகிய சாலைகளில் பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது.!


எங்கு தேவை இருக்கிறதோ. அதை ஆய்வு செய்து அதற்கான வர வரிக்கைகள் தயாராக உள்ளது.!

ree

மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும் நடவடிக்கை எடுக்கப்படும். மினி பஸ் தொடர்பாக அடுத்த கட்டமாக முழு கொள்கை வெளியிடப்படும் எங்கெங்க பேருந்து தேவை என்று மக்கள் சொல்கிறார்களோ பேருந்து இயக்குவதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.!


போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நான் உங்களோடு இருக்கிறேன், எங்களை வழி நடத்துபவர், கழகத்தலைவர் தளபதி முதலமைச்சர்.!


எங்களுக்கு தெரியாமல் பேருந்து கட்டண உயர்வு அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.!


தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது. போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறது, கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தொழிலாளர்களே கூறி வருகிறார்கள்.!


தனியார் பேருந்து உரிமையாளர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகிறார்கள். நம் முதல்வர் தளபதியார் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்கிற அவரின் அந்த எண்ணத்தில் தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல்

இயக்குப்பட்டு வருகின்றது.!


இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page