top of page
Search

மோடிக்கு தொடங்கியதா சறுக்கல்கள்! 30ஆண்டுகளுக்கு பின்னர்பாராளு மன்ற சபாநாயர் தேர்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 26, 2024
  • 1 min read
ree

பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் 30 ஆண்டுகளுக்கு இன்று நடைபெறுகின்றது.!


இது பாஜக, மோடிக்கு சறுக்கல்கள் ஆரம்ப அறிகுறிகள் என்று அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்புடன் பேசப்படுகின்றது.!




மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முதல்முறையாக மோடி தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது.!


இந்த நிலையில், எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமலேயே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா சபாநாயகர் பதவிக்கு .ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லா வை மீண்டும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.!


இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில், நாடாளுமன்ற மரபுப்படி மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்நாத் சிங்கிடம் உறுதிபட கூறியிருந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.!

ree

இதையடுத்து, ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு பதிலடி தரும் வகையில் வேட்பாளரை நிறுத்தியது இண்டியா கூட்டணி.


மக்களவை சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜகவின் பிடிவாதத்தால் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.!


இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். . 8-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதும் .!


இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரசியலமைப்பு சட்ட விதிகள் ஏற்படுத்தும் முன்னர் 1952 ம் . ஆண்டும், மிசா எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்தும் சபாநாயகர் தேர்தல் நடந்தாக கூறப்படுகின்றது.!


2024.நடைபெற்ற பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.!

.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page