திண்டுக்கல்: ரூ.20 லட்சத்துடன் இ.டி. அதிகாரி! காருடன் சிக்கினார்! லஞ்ச ஒழிப்பு போலிஸார் விசாரணை!
- உறியடி செய்திகள்

- Dec 1, 2023
- 2 min read

இ.டி. அதிகாரி. 20 லட்சம் பணத்துடன் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை, திண்டுக்கல்லில் பரப்பரப்பு.!
பா.ஜ.க.ஆட்சியில்லாத மாநிலங்களில், இ.டி.(அமலாக்கத்துறை) மூலம் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை அச்சுறுத்து வருவதாக உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டு, பல்வேறு அதிரடி கருத்து விசமர்சனங்கள் தினந்தோறும் வெளியாகி மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தியாவின் வரலாற்றில் மாநில போலீசார்,அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இதுவே முதல் முறை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் டிஎஸ்பி தலைமையிலான 10 போலீசார் உள்ளே நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.!
அவ்வாறு எழுப்பப்படும் சந்தேகங்கள், கேள்விகளை, விமர்சனங்களை, மீது கவனம் ஈர்க்கும் வகையில் தற்போது திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அது பற்றிய விபரம் வருமாறு!

பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் 1/12/2023 அன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர்.!
பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.!

அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போது அவர் பெயர் அங்கித் திவாரி என்றும் பழனி அருகே மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறை போடப்பட்டுள்ள அந்நிய செலாவணி வழக்கை முடித்துக் கொடுக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு காரில் வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.!
மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.!


ED அலுவலக பூட்டு உடைப்பு!
மதுரை ED அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையின் பூட்டு உடைப்பு என்று தகவல்
நீண்ட நேரமாக அங்கித் திவாரி அறை பூட்டை திறக்கச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்டும் அமலாக்கத்துறையினர் திறக்க மறுத்ததை அடுத்து
அங்கித் திவாரி அறையின் பூட்டை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினர் உடைத்து சோதனை நடத்துகின்றனர். பூட்டை உடைத்த உடனே அமலாக்கத்துறை துணை ராணுவத்தை வரவழைத்திருகின்றனர் என்றும் தகவல்!
இந்தியாவின் வரலாற்றில் மாநில போலீசார்,அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இதுவே முதல் முறை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் டிஎஸ்பி தலைமையிலான 10 போலீசார் உள்ளே நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.!
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்!




Comments