2026 தேர்தலுக்கு தயாரானது தி.மு.கழகம்! ஒருங்கிணைப்புக்குழு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்!
- உறியடி செய்திகள்

- Jul 20, 2024
- 1 min read

2026 சட்டமன்ற தேர்தல் பணி! தி.மு.க. ஒருங்கிணைப்புக்குழு! முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.!
ஒருங்கிணைப்புக் குழுவில் தி.மு.கழக முதன்மைச்செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு, கழக சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள், எ.வே.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.!

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.!

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை – கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.!




கே.என்.நேரு
ஆர்.எஸ்.பாரதி .எ.வ.வேலு தங்கம் தென்னரசு. உதயநிதி ஆகியோர் இந்தக்குழுவில் இடம்பெறுகின்றனர்.!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது!




Comments