top of page
Search

தி.மு.க. தேர்தல் அறிக்கை!பெட்ரோல், டீசல், கேஸ், விலை குறைப்பு! சுங்கசாவடிகள் அகற்றம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 20, 2024
  • 2 min read
ree

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுத் தலைவர், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்கு டி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி. தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.15 மணிக்கு வெளியிட்டார்.!

ree

ree

தொடர்ந்து அவர் பேசியதாவது ;

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். இது உறுதிமொழி மட்டுமல்ல; வழிகாட்டும் நெறிமுறை. இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தியது பாஜக அரசு.கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.!

ree

தனது கையில் கிடைத்த அதிகாரத்தை பா.ஜ.க. அரசு வீணடித்துவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தையும் சிறுகச் சிறுக சிதைத்துவிட்டது பாஜக. இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல.!


அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கபப்ட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கான வளர்ச்சித்திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன, மேலும் மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்!.

ree

உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 361 பிரிவு நீக்கப்படும்புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஒன்றிய அரசு தேர்வுகள் நடத்தப்படும்.!


திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்.!

ree

காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.இந்தியா முழுவதும் உள்ளவழங்கப்படும் மாநிலம் குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்பாஜக அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500-க்கு வழங்கப்படும்; பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறைக்கப்படும்.ஒரு லிட்டர் டீசல் ரூ.65-க்கு விற்கப்படும்.நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்வட்டியில்லா கல்விக்கடனாக மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்ஜிஎஸ்டி சட்டங்கள் திருத்தப்படும்குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.!

ree

ree

வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு, +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும்தமிழ்நாட்டில் புதிதாக ஐஐடி, ஐஐஎம் அமைக்கப்படும்ரயில்வே பயணத்தில் பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட சலுகைகள் அனைத்தும் மீண்டும் வழங்கப்படும். தி.மு.கழகத்தை பொறுத்தவரை சொன்னதை செய்வோம்; சொல்வதைத் தான் செய்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page