top of page
Search

தேர்தலின் போது மட்டும் மக்கள் மீது பாசமா? மோடி சுற்றுப்பயணம் வெற்று பயணமாக முடியும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 13, 2024
  • 7 min read
ree

மக்களுக்கு நலம் பயக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் பிரதமரின் சுற்றுப் பயணம் வெற்றுப் பயணம்தான்’’ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!.

தமிழ்நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தரு­ம­பு­ரி­யில் நடை­பெற்ற அரசு விழா­வில், தரு­ம­புரி, கிருஷ்­ண­கிரி மற்­றும் சேலம் மாவட்­டங்­க­ளில் முடி­வுற்ற திட்­டப் பணி­களை திறந்து வைக்­கும் விழா, புதிய திட்­டப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டு விழா மற்­றும் அரசு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நடைபெற்றது.!


விழா­வில் தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.!


சேலம் - தரு­ம­புரி – கிருஷ்­ண­கிரி என்று மூன்று மாவட்­டங்­க­ளுக்­கு­மான முத்­தான விழா இது!

‘முத்­துக்­கள் மூன்று’ என்று சொல்­லக்­கூடிய வகை­யில் நேரு – பன்­னீர்­செல்­வம்

சக்­க­ர­பாணி ஆகி­யோ­ரது செயல்­பா­டு­கள் இதில் அடங்­கி­யி­ருக்­கின்­றன!

இவர்­க­ளு­டைய செயல்­பா­டு­க­ளால் இந்த மாவட்­டங்­க­ளின் மக்­க­ளின் அன்­புக்கு இவர்­கள் சொந்­த­மா­கி­விட்­டார்­கள்.!

ree

கட்­சிப் பணி­யாக இருந்­தா­லும் - ஆட்­சிப் பணி­யாக இருந்­தா­லும் – அதே வேகத்­து­ட­னும், விவே­கத்­து­ட­னும் செய்து முடித்து காட்­டு­கிற ஆற்­றல் உரி­ய­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் தான் இவர்­கள். இந்த நிகழ்ச்­சியை சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கிற இவர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, இவர்­க­ளுக்கு துணை நிற்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் அலு­வ­லர்­க­ளுக்­கும், என்­னு­டைய அன்­பார்ந்த வாழ்த்­து­களை­யும், வணக்­கத்­தை­யும் நான் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.!

புல­வர் அவ்­வை­யா­ரின் ஆயுள் வளர்ந்­தால், தமிழ் வள­ரும் என்று எண்ணி, நெல்­லிக்­க­னியை தந்த கடை­யேழு வள்­ளல்­க­ளில் ஒரு­வ­ரான அதி­ய­மான் ஆட்சி செலுத்­திய, தமிழ் ஊரான தக­டூர் இருப்பது, இந்த தரு­ம­புரி மண்ணில் தான்!


தரு­ம­புரி என்று சொன்­ன­துமே என்­னு­டைய நினை­வுக்கு வரு­வது, ஒகே­னக்­கல்!

1928 கோடி ரூபா­யில் உரு­வாக்­கப்­பட்ட, ஒகே­னக்­கல் கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டத்­துக்கு, 2008-ஆம் ஆண்டு, உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ரான நான், ஜப்­பான் நாட்­டிற்­குச் சென்று, நிதி வச­தி­க­ளை­யும், திட்­ட­மி­டு­தல் க­ளை­யும் செய்­தேன்.!

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் இந்த திட்­டத்தை அன்­றைக்கு தொடங்கி வைத்­தார். ஆனால், ஆட்சி மாறி­ய­தும், காட்சி மாறி­யது.!


ஒகே­னக்­கல் கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­துக்கு முட்­டுக்­கட்டை போட்­டார்­கள். உடனே நானே இங்கே நேரில் வந்து போராட்­டம் நடத்­தி­னேன். அதை நீங்­கள் மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். அந்த வகை­யில், தரு­ம­புரி மாவட்­டத்து மக்­க­ளுக்கு நல்ல குடி­நீர் கிடைக்க கார­ண­மா­ன­வன் நான் என்ற மகிழ்ச்­சி­யோடு உங்கள் முன்னே நான் நின்று கொண்­டி­ருக்­கி­றேன்

அவ்­வை­யின் வர­லாற்­றில் தரு­ம­பு­ரிக்கு எப்­படி பங்கு இருக்­கி­றதோ, அதே­போல, தமிழ்­நாட்டு மக­ளிர் முன்­னேற்­றத்­தி­லே­யும் தரு­ம­பு­ரிக்கு முக்­கிய பங்­குண்டு!

1989-ஆம் ஆண்டு இதே தரு­ம­பு­ரி­யில் தான் மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் என்ற அமைப்பை தமி­ழி­னத் தலை­வர், முத்தமிழறிஞர் கலை­ஞர் தொடங்கி வைத்­தார்.!

ree

அவர் பேரால் ஏரா­ள­மான மக­ளிர் வாழ்­வில் மகிழ்ச்­சியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தில் விண்­ணப்­பிக்­கின்ற முகா­மும் இங்­கே­தான் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

இந்த ரெண்டு திட்­டங்­க­ளும் மக­ளிர் வாழ்­வில் ஒளி­வி­ளக்­காக திகழ்ந்து கொண்­டி­ருக்­கிறது!


பெண்­க­ளுக்கு சொத்­தில் சம­பங்கு என்ற சட்­டம் அதை இயற்­றி­ய­வர் தலை­வர் கலைஞர்.!

இது பெண்­ணி­னத்­திற்கு திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி வழங்­கிய மாபெ­ரும் அதி­கா­ரக் கொடை! அதன் அடுத்­த­கட்­டம்­தான் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்!

உரி­மைத் தொகை வழங்­கு­வோம் என்று தேர்­த­லில் சொன்­னோம்! அதை நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம். ஏனென்­றால், உங்­கள் எல்­லா­ருக்­குமே தெரி­யும், இது, “சொன்­ன­தைச் செய்­யும் ஆட்சி!”

இந்த திட்­டத்­தால் இன்­றைக்கு ஒரு கோடியே 15 லட்­சம் மக­ளி­ருக்கு, மாதம் தோறும் ஆயி­ரம் ரூபாய் கொடுக்­கி­றோம் என்­றால், அவர்­களை பொரு­ளா­தார அதி­கா­ரம் உள்­ள­வர்­க­ளாக மாற்­றி­யி­ருக்­கி­றோம் என்று பொருள்!

ree

கொஞ்ச நாளைக்கு முன்­னால், டிவி-­­யில் ஒரு பேட்டி பார்த்­தேன். இந்த உரி­மைத்­தொகையைப் பெற்ற சகோ­தரி ஒரு­வர், “இது ஸ்டாலின் அண்­ணன் கொடுத்த சீர்” என்று சொன்­னார்­கள். அப்­போது எனக்கு என்ன தோன்­றி­யது என்­றால், நம்ம திரா­விட மாடல் அர­சுக்­கும் தமிழ்­நாட்டு மக­ளி­ருக்­கும் இந்த திட்­டத்­தால் ஏற்­பட்­டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன்.!

இதுமட்­டு­மல்­லா­மல், இந்த திரா­விட மாடல் அரசு இது­வரை நிறை­வேற்­றி­யி­ருக்­கிற திட்­டங்­களை பட்­டி­ய­லிட வேண்­டும் என்­றால், நாள் முழுக்க நான் பேசிக் கொண்டே இருக்­க­ வேண்­டும், சொல்­லிக் கொண்டே இருக்­க­வேண்­டும்.!


அத­னால், முத்­தான சில திட்­டங்­களை பற்றி மட்­டும் சொல்ல விரும்­பு­ கி­றேன்.

“விடி­யல் பய­ணத் திட்­டம்” மூல­மாக நமது சகோ­த­ரி­கள் மாதந்­தோ­றும் 888 ரூபாய் வரை சேமிக்­கி­றார்­கள்.!

முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டத்­தில் நாள்­தோ­றும் 16 லட்­சம் குழந்­தை­கள் வயி­றார சாப்­பி­டு­கி­றார்­கள்.!

மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் “புது­மைப்­பெண்” திட்­டம் மூல­மாக மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் போய்ச் சேரு­கி­றது.!

இரண்டே ஆண்­டில், ‘நான் முதல்­வன்’ திட்­டம் மூல­மாக

28 லட்­சம் இளை­ஞர்­கள் திறன் பயிற்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.!

‘இல்­லம் தேடிக் கல்வி’ திட்­டம் மூல­மாக 24 லட்­சத்து 86 ஆயி­ரம் பள்­ளிக் குழந்­தை­கள் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்!.

ree

2 லட்­சம் உழ­வர்­க­ளுக்கு புதிய இல­வச மின் இணைப்பு கொடுத்­தி­ருக்­கி­றோம்.! உயர்த்­தப்­பட்ட ஓய்­வூ­தி­யத்­தில் 30 லட்­சம் முதி­யோ­ரும் 5 லட்­சம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­களும் மாதந்­தோ­றும் பய­ன­டைந்து கொண்டு வரு­கி­றார்­கள்.!

‘நம்­மைக் காக்­கும் 48’ திட்­டம் மூல­மாக 2 லட்­சம் உயிர்­கள் காப்­பாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.!

“மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்” திட்­டத்­தால் ஒரு கோடி பேர் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.!

‘முதல்­வ­ரின் முக­வரி திட்­டம்’, ’மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டம்’ ஆகி­ய­வற்­றின் மூல­மாக 23 லட்­சத்து 9 ஆயி­ரம் பேர் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்!.


இந்த திட்­டங்­க­ளின் பயன்­கள் எல்­லாம் முறை­யாக சென்று சேரு­கி­றதா என்று உறு­தி­செய்ய இப்­போது “நீங்­கள் நலமா?” திட்­டத்­தைத் தொடங்கி வைத்து, நானே மக்­க­ளி­டம் பேசிக் கொண்­டி­ருக்­கி­றேன்

மக்­க­ளின் குறை­களை தீர்த்து வைப்­ப­தற்­காக இப்­படி அடுத்­த­டுத்து திட்­டங்­களை அறி­வித்து, உட­னுக்­கு­டன் தீர்வு காணு­கின்ற அர­சு­தான், இந்த திரா­விட மாடல் அரசு! என்­பதை பெரு­மை­யோடு நான் கம்­பீ­ர­மாக சொல்ல விரும்­பு­கி­றேன்.!

அத­னால்­தான், இந்த அரசை மக்­க­ளின் மனச்­சாட்சி என்று சொன்­னேன்.!

இப்­படி மக­ளிர் – மாண­வர்­கள் – இளை­ஞர்­கள் – முதி­யோர் –உழ­வர்­கள் – உழைப்­பா­ளர்­கள் என்று தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற ஒவ்­வொரு குடும்­ப­மும் பய­ன­டை­கின்ற வகை­யில் திட்­டங்­களை பார்த்து பார்த்து செயல்­ப­டுத்தி வரு­கி­றோம்.!


இப்­படி எந்த அர­சா­வது செயல்­பட்­டதா? பத்­தாண்­டு­க­ளாக தமிழ்­நாட்­டையே சுரண்­டி­னார்­களே, அவர்­க­ளால், இப்­ப­டி­யெல்­லாம் ஏதா­வது ஒரு திட்­டத்தை நிறை­வேற்ற முடிந்­ததா?

உங்­க­ளுக்­காக பாடு­பட முடிந்­ததா? அவர்­க­ளால் இப்­படி பட்­டி­ய­லிட முடி­யுமா? முடி­யாது! ஏனென்­றால், இந்த தரு­ம­புரி மற்­றும் கிருஷ்­ண­கிரி மக்­க­ளுக்­கான ஒகே­னக்­கல் திட்­டத்­தையே முடக்­கி­ய­து­தான் அ.தி­.மு.க. ஆட்­சி­யின் சாதனை! சாத­னை­தான் இல்­லை­யென்­றால், அவர்­க­ளால் ஏற்­பட்ட வேதனை.!


உங்­க­ளுக்கே நன்­றாக தெரி­யும்!

வேளாண் கல்­லூரி மாண­வி­க­ளின் குடும்­பத்­துக்கு ஏற்­பட்ட வேத­னையை மீண்­டும் விரி­வாக நான் இங்கே சொல்ல விரும்­ப­வில்லை! உங்­க­ளு­டைய திரா­விட மாடல் அரசு ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் பல்­வேறு திட்­டங்­களை தொடர்ந்து நிறை­வேற்­றிக் கொண்டே இருக்­கி­றது!

தரு­ம­புரி மாவட்­டத்­துக்­கான திட்­டங்­கள் சொல்ல வேண்­டும் என்­றால், முத்­த­மி­ ழ­றி­ஞர் கலை­ஞர் அமைத்த ‘வள்­ளல் அதி­ய­மான் கோட்­டம்’ 1 கோடி ரூபாய் செல­வில் புன­ர­மைக்­கப்­பட்டு திறக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.!


விடு­த­லைப் போராட்ட தியாகி சுப்­பி­ர­ம­ணிய சிவா­வுக்கு தலை­வர் கலை­ஞர் மணி­மண்­ட­பம் எழுப்­பி­னார்!. அந்த தியா­கி­யின் விருப்­ப­மான பாரத மாதா நினை­வா­ல­யம் இந்த தன­ய­னின் ஆட்­சி­யில்­தான் திறக்­கப்­பட்­டது!

அரசு தரு­ம­புரி மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில்–­ஒ­ருங்­கி­ணைந்த பேறு­கால அவ­சர கிசிச்சை மற்­றும் சிசு தீவிர கிச்சை பரா­ம­ரிப்பு மையத்தை திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்.!


பேருந்து வச­தியே இது­வரை இல்­லாத 8 மலைக் கிரா­மங்­கள் பயன்­பெற வத்­தல்­ம­லைக்கு முதன்­மு­தலாக புதிய பேருந்து கடந்த ஆண்டு தொடங்கி

வைத்­தேன்.!

ஒகே­னக்­கல் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்­தின் இரண்­டா­வது கட்­டப் பணி­கள் 7 ஆயி­ரத்து 890 கோடி ரூபாய் செல­வில் நிறை­வேற்­றப்­ப­டும்.!


17 கோடியே 58 லட்­சம் ரூபாய் செல­வில் ஒகே­னக்­க­லுக்கு வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­காக பல்­வேறு பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.!

தரு­ம­பு­ரி­யில், கூடு­தல் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கக் கட்­ட­டப் பணி­கள் முடி­வ­டைய உள்ளது.!.

மொரப்­பூர் – தரு­ம­புரி புதிய அகல ரயில் பாதைக்கு நில எடுப்­புப் பணி­கள் நடை­பெ­று­கி­றது.!


இதே போல, கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­துக்கு சொல்ல வேண்­டும் என்­றால், மூன்­றாண்­டு­க­ளில், ஊரக வளர்ச்­சித் துறை மூலம் குடி­யி­ருப்­பு­கள், ஊரக உட்­கட்­ட­மைப்பு பணி­கள், ஓசூர் மாந­க­ராட்சி, கிருஷ்­ண­கிரி நக­ராட்சி, பல்­வேறு பேரூ­ராட்­சி­க­ளுக்கு உட்­கட்­ட­மைப்பு பணி­கள், பொதுப்­ப­ணித்­துறை கட்­ட­டங்­கள், மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான நலத்­திட்ட உத­வி­கள் என்று 927 கோடி ரூபாய் மதிப்­பி­லான பணி­க­ளும் – திட்­டங்­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது என்பதையும் மகிழ்ச்­சி­யோடு நான் இங்கே தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.!

சேலம் மாவட்­டத்­துக்­கான பணி­கள் பற்றி சொல்­ல­வேண்­டும் என்­றால், ஏற்­க­னவே சீல­நா­யக்­கன்­பட்­டி­யில் நடந்த அரசு விழா­வில் 1,242 கோடி ரூபாய் மதிப்­பி­லான புதிய திட்­டங்­களை அறி­வித்­தேன்.! அது­மட்­டு­மில்­லா­மல், இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கும் மினி டைடல் பூங்­கா­வுக்கும் அடிக்­கல் நாட்­டி­யி­ருக்­கி­றேன்!.


அரி­யா­க­வுண்­டம்­பட்­டி­யில் கொலுசு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்­கான பன்­மாடி உற்­பத்தி மையத்­துக்­கான பணி­கள் நடந்து கொண்டு இருக்­கி­றது!.

ஜாகீர் அம்­மா­பா­ளை­யத்­தில் ஒருங்­கி­ணைந்த ஜவு­ளிப் பூங்கா அமைக்க போகி­றோம்.!

சேலம் அரசு சட்­டக் கல்­லூ­ரிக்­கான விடு­தி­க­ளு­டன் கூடிய நிரந்­த­ரக் கட்­ட­டத்­தை­யும் – ஈர­டுக்கு பேருந்து நிலை­யத்­தை­ யும் திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்.!

போடி­நா­யக்­கன்­பட்டி ஏரி, அல்­லிக்­குட்டை ஏரி, மூக்­க­னேரி ஆகி­யவை புன­ர­மைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.!

பொது­மக்­க­ளின் நீண்ட கால கோரிக்­கைய ஏற்று, அம்­மாப்­பேட்டை பகு­தி­யில் இர­யில்வே மேம்­பால பணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.!


இதன் தொடர்ச்­சி­யா­க­தான், இந்த நிகழ்ச்சி மூல­மாக தரு­ம­புரி, கிருஷ்­ண­கிரி, சேலம் மாவட்­டங்­க­ளுக்கு 560 கோடியே 23 இலட்ச ரூபாய் மதிப்­பி­லான புதிய திட்­டப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி, முடி­வுற்ற திட்­டப் பணி­களை திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்.!

இப்படியாக

8 ஆயி­ரத்து 736 பய­னா­ளி­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­யி­ருக்­கி­றேன்.!


இன்­னும் சில முக்­கிய அறி­விப்­பு­கள் வெளி­யிட விரும்­பு­கி­றேன்.

வெண்­ணாம்­பட்டி சாலை­யை­யும், தரு­ம­புரி மாநில நெடுஞ்­சா­லை­யை­யும் இணைக்­கின்ற வகை­யில் பார­தி­பு­ரத்­தில் 36 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் இர­யில்வே மேம்­பா­லம் அமைக்­கப்­ப­டும்.!


வாச்­சாத்தி முதல் கல­சப்­பாடி வரை­யி­லான மலைப்­ப­கு­தி­க­ளில்

12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சாலை அமைக்­கப்­ப­டும்.!

தரு­ம­புரி மாவட்­டத்­தில் ஐந்து சமு­தாய நலக்­கூ­டங்­கள் நான்கு கோடியே நான்கு லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­டும்.!


வாச்­சாத்தி கொடு­மையை யாரும் மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள்! எந்த ஆட்­சி­யில் நடந்­தது என்­பதையும், மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள்! ஆனால், பாதிக்­கப்­பட்ட பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான் விடி­யல் பிறந்­தி­ருக்­கி­றது.!

பாதிக்­கப்­பட்ட 18 நபர்­க­ளுக்கு தலா 10 லட்ச ரூபாய் என்று மொத்­த­மாக 1 கோடியே 80 லட்­சம் ரூபாய் நிதி­யு­த­வி­யாக வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மற்ற வேலை­வாய்ப்­பு­க­ளும் விரை­வில் வழங்­கப்­ப­டும்.!


இவற்றை போல கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் ......


தொழி­லா­ளர்­கள் நிறைந்த ஓசூர் மற்­றும் அதை சுற்றி இருக்­கின்ற பகு­தி­க­ளில், அவர்­க­ளு­டைய நல­னுக்­காக, நட­மா­டும் மருத்­து­வப் பிரிவு ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.!

கிருஷ்­ண­கிரி மாவட்ட மைய நூல­கத்­துக்கு 50 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் கட்­ட­டம் அமைக்­கப்­ப­டும்!.


தளி ஊராட்சி ஒன்­றி­யத்­தில் 10 கிலோ மீட்­ட­ருக்கு சாலை உட்­பட, கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் 75 சாலை­கள் சுமார் 78 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும்!

28 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 92 சாலை­கள், 7 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 28 சிறு­பா­லங்­கள் அமைப்­ப­தற்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்!

தேன்­க­னிக்­கோட்டை வட்­டத்­தில் யானை தாக்­கு­த­லில் இருந்து மக்­களை காப்­பாற்ற 10 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு 3 கோடியே 50 லட்ச ரூபாய் செல­வில் எஃகு கம்பி கயிறு வேலி அமைக்­கப்­ப­டும்.!


கெல­மங்­க­லம் அரசு பல்­தொ­ழில்­நுட்ப கல்­லூரி வளா­கத்­தில் 100 மாண­வர்­கள் தங்­கும் வகை­யில், ‘புதிய பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நல பல்­தொ­ழில்­நுட்ப கல்­லூரி மாண­வர் விடுதி’ தொடங்­கப்­ப­டும்.!

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில், 3 சமு­தாய நலக்­கூ­டங்­கள்

2 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­டும்.!


கிரா­மப்­புற பகு­தி­க­ளில், 5 துணை சுகா­தார மையக் கட்­ட­டங்­க­ளும், நகர்ப்­பு­றத்­தில், 2 துணை சுகா­தார மையக் கட்­ட­டங்­க­ளும் 3 கோடியே 15 லட்ச ரூபாய் செல­வில் கட்­டப்­ப­டும்.!

உனிச்­செட்டி ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் 30 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில், பழங்­கு­டி­யி­ன­ருக்­கான புதிய பிறப்பு காத்­தி­ருப்பு கூடம் அமைக்­கப்­ப­டும்!.


கிருஷ்­ண­கிரி மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சத்­து­ணவு மற்­றும் மறு­வாழ்வு மையம் 25 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.!

ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளில், 30 பொது விநி­யோக அங்­கா­டி­கள் 28 அங்­கன்­வாடி மையங்­கள் 9 கோடியே 26 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­டும்.!

வன விலங்­கு­க­ளுக்கு தண்­ணீர் கிடைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நீர்­நி­லை­கள் தூர்­வா­ரும் திட்­டம் தொடங்­கப்­ப­டும்!.


சேலம் மாவட்­டத்­தில்......


210 கிலோ மீட்­டர் நீளத்­தில் 79 கிரா­மச் சாலை­கள், 21 உயர்­மட்­டப் பாலங்­கள், 127 கிலோ மீட்­ட­ருக்கு 211 ஓர­டுக்கு கப்பி சாலை­கள்,

76 கிலோ மீட்­டர் நீளத்­திற்கு சிமெண்ட் கான்­கி­ரீட் சாலை, 47 கிலோ மீட்­டர் நீளத்­துக்கு பேவர் பிளாக் அமைக்­கும் பணி­கள் ஆகி­யவை, 164 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும்!

செட்­டி­சா­வடி வளா­கத்­தில் இருக்­கின்ற குப்­பை­மேடு ‘பயோ-­மை­னிங்’ அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­கள், 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும்!


நங்­க­வள்ளி குடி­நீர் நீரேற்ற நிலை­யம் 10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேம்­ப­டுத்­தப்­ப­டும்.!

சேலம் மாவட்­டத்­தில் 14 சமு­தாய நலக்­கூ­டங்­கள் 11 கோடியே

46 லட்ச ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­டும்.!


சேலம் மாந­க­ராட்­சி­யில், தனி குடி­நீர் திட்­டத்­தின்­கீழ் உள்ள மோட்­டார் பம்­பு­கள் மற்­றும் விஎப்.டி,களை மறு சீர­மைக்­கும் பணி,

15 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும்!

ree

தெரு நாய்­க­ளால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டும் பாதிப்பை தடுக்க, ’விலங்கு பிறப்பு கட்­டுப்­பாடு மையம்’ கட்­டும் பணி 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும்.

இப்­படி எப்­போ­தும் உங்­க­ளுக்­கா­கவே செயல்­ப­டுற அர­சு­தான், நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு!

அனைத்து மாவட்­டங்­க­ளை­யும் சம­மாக மதித்து நாம் செயல்­ப­டு­கி­றோம். ஆனால், ஒன்­றிய பா.ஜ.க அப்­படி மாநி­லங்­களை சம­மாக நினைக்­கின்­றதா?

ஒன்­றிய அரசு என்­றால், எல்லா மாநி­லங்­க­ளை­யும் மதிக்­க­ணும்! வளர்க்­க­ணும்! ஆனால், இன்­றைக்கு ஒன்­றி­யத்தை ஆளு­கின்ற அரசு அப்­படி செயல்­ப­ட­வில்லை!


மாநி­லங்­க­ளையே அழிக்க நினைக்­குது.! மாநி­லங்­களை அழிக்­கி­றது மூல­மாக நம்­மு­டைய மொழியை – இனத்தை – பண்­பாட்டை அழிக்­கப் பார்க்­கி­றது.!

மாநி­லத்­தின் வளர்ச்­சிக்கு மிக மிக முக்­கி­ய­மா­னது நிதி. அந்த நிதி ஆதா­ரத்தை பறிப்­பது மாநில வளர்ச்­சிக்­கான ஆக்­சி­ஜனை நிறுத்­து­கின்ற மாதிரி! அதைத்­தான் இப்­போது செய்து கொண்டு இருக்­கி­றார்­கள்.!


மாநி­லங்­கள் ஒன்­றி­ணைந்­த­து­தான் ஒன்­றிய அரசு!

இதை உண­ரா­மல் செயல்­பட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள்!.

தேர்­தல், நெருங்கி வரு­கி­றது! பிர­த­ம­ர் மோடியும், அடிக்­கடி சுற்­றுப்­ப­ய­ணம் வரு­கி­றார்!

இந்த சுற்­றுப்­ப­ய­ணங்­க­ளைப் பற்றி தமிழ்­நாட்டு மக்­கள் என்ன நினைக்­கி­றார்­கள். இதை வெற்­றுப் பய­ணங்­க­ளா­க­தான் பார்க்­கி­றார்­கள்.! இதை சுற்­றுப்­ப­ய­ண­மாக பார்க்­க­வில்லை. இந்த பய­ணங்­க­ளால் ஏதா­வது வளர்ச்­சித் திட்­டங்­கள் இருக்­கி­றதா?


2019-ஆம் ஆண்டு அடிக்­கல் நாட்­டிய மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னைக்கே இப்­போ­து­தான் கட்­டு­மா­னப் பணியை தொடங்­கப் போவ­தாக நாட­கம் நடத்­து­கி­றார்­கள். தேர்­தல் முடிந்­த­தும் நிறுத்­தி­டு­வார்­கள்!.

தேர்­தல் வரு­கி­றது என்று சிலிண்­டர் விலையை குறைத்­த­து­போல அறி­விக்­கி­றார் பிர­த­மர்.!


10 ஆண்­டு­க­ளாக 500 ரூபாய்க்­கும் மேல உயர்த்­திட்டு, இப்­போது 100 ரூபாய் மட்­டும் குறைக்­கி­றது, அப்­பட்­ட­மான மோசடி வேலை­யில்­லையா இது?

ree

இதை­விட மக்­களை ஏமாற்­று­கிற செயல் இருக்க முடி­யுமா?

சென்­னை­யில் வெள்­ளம் வந்­த­போது, பாதிக்­கப்­பட்ட மக்­களை பார்க்க வராத பிர­த­மர் மோடி - தூத்­துக்­கு­டி­யில் வெள்­ளம் வந்­த­போது பாதிக்­கப்­பட்ட மக்­களை பார்க்க வராத பிர­த­மர் மோடி - இப்­போது மட்­டும் அடிக்­கடி வரு­கி­றாரே? என்ன கார­ணம்? தேர்­தல் வரப் போகி­றது. ஓட்டு கேட்­டு­தான் வரு­கி­றார் என்று மக்­க­ளுக்­குத் தெரி­யும்.!


‘தமிழ்­நாட்டு மக்­க­ளின் வளர்ச்சி நிதியை கொள்­ளை­ய­டிக்க நான் விட­மாட்­டேன்’ என்று சொல்லி இருக்­கிறார்.!.


பிரதமர் மோடி தமிழ்­நாட்­டுக்கு என்ன வளர்ச்சி நிதியை கொடுத்­தி­ருக்­கார்?


ஜி.எஸ்.டி வரி இழப்­பீட்டு நிறுத்­தி­ய­தால், தமிழ்­நாட்­டுக்­குச் சேர வேண்­டிய 20 ஆயி­ரம் கோடி ரூபாய் கிடைக்­க­வில்லை.

வெள்ள நிவா­ர­ண­மாக நாம் கேட்ட 37 ஆயி­ரம் கோடிய தர­வில்லை.

மெட்ரோ ரயில் இரண்­டாம் கட்­டப் பணி­க­ளுக்கு பணம் தர­வில்லை, ஒப்­பு­த­லும் வழங்­க­வில்லை.

பிர­த­மர் வீடு­கட்­டும் திட்­டத்­துக்கு முக்­கால் பங்கு பணம் தரு­வது மாநில அர­சு­தான்.!


வீடு­க­ளுக்கு குடி­நீர் இணைப்பு வழங்­கு­கி­றற ஜல்­ஜீ­வன் திட்­டத்­துக்கு மாநில அர­சின் பங்­க­ளிப்பு 50 விழுக்­காடு.

இதை எல்­லாம் வைத்து பார்க்­கும்­போது மாநில அர­சி­டம் பணம் வாங்­கித்­தான் தன்­னு­டைய ஸ்டிக்­கரை பிர­த­மர்

ஒட்­டிக்­ கொள்கி­றார் என்று அவ­ருக்கு நான் நினை­வூட்ட விரும்­பு­கி­றேன்.!

ree

இன்­னும் கேட்­க­வேண்­டும் என்­றால், ஒன்­றிய அர­சுக்கு வரி வரு­வாய் எங்கே இருந்து வரு­கி­றது? மாநி­லங்­க­ளின் வரி­யாக இருந்­தா­லும், ஒன்­றிய வரி­யாக இருந்­தா­லும் மாநி­லங்­க­ளில் இருக்­கின்ற மக்­கள் கொடுக்­கின்ற வரி­தான்!


வெறும் கையால் முழம் போடு­வது என்று சொல்­லு­வார்­கள். அது­போல, தமிழ்­நாட்­டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்­டுக் கொண்டு இருக்­கி­றார் நம்­மு­டைய பார­தப் பிர­த­மர் மோடி அவர்­கள். தேர்­தல் நேரத்­தில் மட்­டும்­தான் பிர­த­ம­ருக்கு மக்­கள் மேல பாசம் பொங்­கும்... இதை தமிழ்­நாட்டு மக்­கள் நன்­றாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.!


ஆனால், நாங்­கள் உங்­க­ளு­டன் இருக்­கி­றோம். மக்­க­ளான நீங்­கள் எங்­க­ளோடு இருக்­கி­றீர்­கள்.

மக்­க­ளும், அர­சும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் ஒரே குடும்­ப­மாக செயல்­பட்டு வரு­கி­றோம்.! இதைத்­தான் குடும்ப ஆட்சி என்று விமர்­சிக்­கி­றார்­கள்.!


தமிழ்­நாட்­டில் நடப்­பது கோடிக்­க­ணக்­கான குடும்­பங்­க­ளின் நல­னுக்­காக நடக்­கின்ற ஆட்சி தான் இது! அத­னால்­தான் உங்­கள் குடும்ப விழா­வுக்கு வரு­கின்ற மாதிரி நீங்­கள் எல்­லாம் இங்கு உரி­மை­யு­டன் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.!

இதே உணர்­வோ­டும், வள­மோ­டும், நல­மோ­டும் வாழ்­வோம்! தமிழ்­நாட்­டை­யும் வாழ வைப்­போம்! இந்­தி­யா­வுக்­கும் வழி­காட்­டி­யாக நாம் மாறு­வோம்!


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page