top of page
Search

பாசிஸத்திற்கு எதிரான திராவிட மாடல் ஆட்சி! நவகிரக கோவில்களுக்கு சிறப்பு பேரூந்து! அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கிறார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 17, 2024
  • 2 min read
ree




பாசிஸத்திற்கு எதிரான திராவிட மாடல் ஆட்சியில் மற்றுமொரு மைல் கல்!

கும்பகோணம் நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு பேருந்து வசதி!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைக்கிறார்.!


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் தேர்தல் வாக்குறுதியாக சொன்னதையும் தாண்டி சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறன்றது.!

அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில், அனைவரும் அர்ச்சகர்களாக்கப்பட்டு. அர்ச்சகர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள். எளிதில் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு ஆட்சி பொருப்பேற்ற 33 மாத காலங்களில் 1.378 கோவில்களுக்கு கும்பாபிஷேகம். பழைமை மிகு ஆலயங்கள் புரைமைப்பு, அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் என்று தனி கவனம் கொண்டு செயல்படுகிறது என்றே கூறலாம்.!

ree

இந்நிலையில் ஆன்மீகம் மேலும் வலுப்பெறும் வகையில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தி.மு.கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி....

அரியலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனைகளின் படியும்....


தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலத்தி வரும் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும்

கும்பகோணத்தில் இருந்து நவக்கிரகக் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து நவகிரகக் கோயில்களுக்கு முதன்முறையாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளது.. இந்த ஆன்மீக சிறப்பு பேருந்துகளை அரியலூர் மாவட்ட தி.மு.கழகச்செயலாளர், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வரும் பிப். 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.!

ree

இது தொடர்பாக போக்குவரத்துக்கழகம் சார்பில்

வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

.

'நவக்கிரகக் கோயில்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பக்தர்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களில் மட்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு 9 நவக்கிரகக் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்தடையும் விதமாகச் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.!


அதன்படி, நவக்கிரகக் கோயில்களுக்கு இயக்கப்படும் இந்த சிறப்புப் பேருந்தில் பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.750-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.!


மேலும், இந்தச் சிறப்புப் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தப் பேருந்து, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு திங்களூர் (சந்திரன் பகவான் ), 7.15 மணிக்கு ஆலங்குடி (குருபகவான் தரிசனம் )செய்த பின் காலை உணவு வேளை முடிந்த பிறகு 9 மணிக்கு திருநாகேஸ்வரம் (ராகுபகவான், )10 மணிக்கு சூரியனார் கோயில் (சூரிய பகவான், ) 11 மணிக்கு கஞ்சனூர் ( சுக்கிர பகவான் ), 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் பகவான் ), மதியம் 12.30 மணி வரை 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை.!,

ree

தொடர்ந்து 2.30 மணிக்கு திருவெண்காடு ( புதன் பகவான் ), மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் (கேது பகவான் ), 6 மணிக்கு திருநள்ளாறு (சனீஸ்வர பகவான் ) கோயிலுக்கு சென்றடைந்து, அங்கு தரிசனம் மேற்கொண்டப் பிறகு, அங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைகிறது.!


இந்தச் சிறப்புப் பேருந்து, வரும் 24-ம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். நவக்கிரகக் கோயில்களுக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், மொபைல் ஆப் www.tnstc.in (Mobile App) Android/I phone செல்போன் மூலமாக முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்' எனவும் கூறப்பட்டுள்ளது!.

ree

பொதுவாக பொதுமக்கள், தங்களின் பரிகாரம் தோஷம், உள்ளிட்ட பிற நம்பிக்கை மிகுந்த வேண்டுதல்களுக்காகவும் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நவக்கிரக கோயில்களுக்கு உரிய நேரத்தில் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்ய முடியாமல் அவதிபட்டு வந்த நிலையில், அரசின் இந்த ஆன்மீக சிறப்பு பேருந்து இயக்கம் என்பது பொதுமக்கள் - ஆன்மீகத்தார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறவுள்ளது என்றால் அது மிகையில்லை!


போக்குவரத்து கழகத்தில் திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மைல் கல் சாதனை!


சபாஸ் அமைச்சரே!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page