இ.டி. அதிகாரி சிக்கியது எப்படி! 3. கோடி கேட்டு 51. லஞ்சத்தில் முடிந்த பேரம்! பரப்பப்பு தகவல்கள்!
- உறியடி செய்திகள்

- Dec 2, 2023
- 2 min read

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த அங்கித் திவாரி, திண்டுக்கலை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம், அவர் மீது ஏற்கனவே வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கை சுட்டிக்காட்டி அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் அதிலிருந்து விடுவிக்க, உயரதிகாரிகளை கவனிக்க 3 கோடி ரூபாய் வேண்டுமென்று சில மாதங்களுக்கு முன் பேரம் பேசியுள்ளார், இறுதியாக ரூ.51 லட்சம் பெற்றுக்கொள்ள முடிவானது.!

கடந்த மாதம் 1 -ம் தேதி அரசு டாக்டர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து மீதிப் பணத்தை கேட்டு தொடர்ந்து வாட்ஸ்ஆப் காலில் மிரட்டியுள்ளார்.!
இவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த டாக்டர் சுரேஷ்பாபு, கடந்த நவம்பர் 30 -ம்தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.!
அங்கித் திவாரி
தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்பது தெரியவந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையாக நேற்று காலை திண்டுக்கல்லில் வைத்து 20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அவரை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.!

இதுபோல் இவர் யார் யாரிடம் எந்தெந்த வழக்குகளில் லஞ்சம் பெற்றுள்ளார், இவர் வாங்கும் பணம் மற்ற அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள மேல் விசாரணை தொடங்கியது.!.
இதனைத் தொடர்ந்து மதுரையிலுள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தி பின்பு, தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது. பின்னர் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு இன்று காலை 7 மணிக்கு சோதனை நிறைவடைந்தது !.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்களுக்கு உதவ 100-க்கும் மேற்பட்ட மதுரை மாநகர காவல்துறையினரை வரவழைத்த நிலையில், அமலாக்கத்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர்.!

ஆரம்பத்தில் சோதனை செய்ய அனுமதிக்க மறுத்த அமலாக்கத்துறை அலுவலர்கள் பின்பு தங்களது வழக்கறிஞர்களை வரவைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடரந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. நள்ளிரவு வரை சோதனை நீடித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் 10 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.!
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர், 'ஏற்கனவே இந்தோ திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால், சி.ஆர்.பி.எப்பை அனுமதிக்க முடியாது என தடுத்தார்.!

அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.News update இதனையடுத்து சி.ஆர்.பி.எப் படையினர் காலை வரை 6 மணி வெளியிலேயே காத்துக்கிடந்தனர்.!
அங்கித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் பலரையும் மிரட்டி அல்லது அச்சுறுத்தி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளாரா, அவருடன் மற்ற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கும், குறிப்பாக சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராய பல்வேறு ஆவணங்களை தேடினார்கள்.!
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறையில் டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 13 மணி நேரம் நடத்திய சோதனை முடிவடைந்தது.!

அங்கித் திவாரியின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை விவரங்கள், மெயில் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் பதிவிட்டுள்ள தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்று பரப்பரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.!
இந்த வழக்கில் இன்னும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிடுள்ளதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.!




Comments