top of page
Search

வளமான தமிழகமாக்கும் முயற்சி ! தொழில் முதலீடுகளை ஈர்க்க ! முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 26, 2024
  • 1 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம்....


முதலீடுகளை ஈர்க்க , வளமான தமிழகமாக்கிடும்,முயற்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைஅமெரிக்கா பயணம்!



சிகாகோவில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களுடன் ஸ்டாலின் சந்தித்து உரைகிறார். டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை சந்தித்து. இதற்கான ஆலோசனை நடத்தினார்.!


ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற ராஜா ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிகாகோ சென்றடைந்தார். தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் ராஜா விரிவான கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சி அட்டவணையையும் இறுதி செய்ததாக தெரிகிறது!.

ree

முன்னதாக அதிக மதிப்புள்ள முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை ராஜா சந்திக்கிறார் அதன் பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசுகிறார். என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.!


ஸ்டாலின், ஆகஸ்ட் 27ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு, 28ம் தேதி சான்பிரான்சிஸ் செல்கிறார் . தொடர்ந்து அமெரிக்காவில் 15 நாட்கள் தங்கி இருக்கும் முதல்வர் சிகாகோவில் இருந்து செப்டம்பர் 11ம் தேதி புறப்பட்டு, 12ம் தேதி சென்னை வந்தடைகிறார்.!

ree

சான்பிரான்சிஸ்கோவில், ஆகஸ்ட் 29-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்கிறார்!.

ree

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கு தனது முந்தைய பயணங்களைப் போலல்லாமல், முதல்வர் இந்த பயணத்தின் போது முதலீட்டாளர்களுடன் சுமார் 30 முக்கிய சந்திப்புகளை நடத்துவார், அமெரிக்காவில் உள்ள பார்ச்சூன் 500 நிறுவனங்களின் அதிகாரிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.!


என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page