top of page
Search

முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்! இந்திய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும்! சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 13, 2024
  • 1 min read
ree


இந்திய ஜனநாயக சட்டத்திற்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டம்,தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட மாட்டாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!


ஒன்­றிய பா.ஜ.க. அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­திற்கு எதி­ரா­னது! எனவே தமிழ்­நாட்­டில் இச்­சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது” என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அறி­வித்­துள்­ளார்.!


இது­கு­றித்து தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்­ அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய இறுதி நாட்­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு இருந்­து­வ­ரும் வேளை­யில், பல்­வேறு தரப்பு மக்­க­ளா­லும் எதிர்க்­கப்­பட்ட, குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­திட அவ­சர கதி­யில் நேற்று அறி­விக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.!


மதச்­சார்­ பின்­மைக்குமுற்­றி­லும் எதி­ரா­னது!


இது இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­புக்கு முற்­றி­லும் எதி­ரா­னது மட்­டு­மல்ல; பல­வ­கை­யான மொழி, இன, மதம் மற்­றும் வாழ்­விட சூழல் ஆகி­ய­வற்­றால் வேறு­பட்­டி­ருந்­தா­லும், ஒன்­று­பட்ட உணர்­வு­டன் வாழ்ந்­து­வ­ரும் இந்­திய மக்­க­ளின் நல­னுக்­கும், இந்­திய தாய்த் திரு­நாட்­டின் பன்­மு­கத் தன்­மைக்­கும், மதச்­சார்­பற்ற தன்­மைக்­கும் முற்­றி­லும் எதி­ரா­ன­தா­கும்.!

ree

அது­மட்­டு­மல்ல; சிறு­பான்மை சமூ­கத்­தி­னர் மற்­றும் முகாம்­வாழ் தமி­ழர்­க­ளின் நல­னுக்­கும் எதி­ரா­ன­து­தான் இந்­தச் சட்­டம்.!


எதிர்ப்­புக் குரல்!


இதன் கார­ண­மா­கத்­தான், தி.மு.கழக அரசு அமைந்­த­வு­ட­னேயே, அதா­வது, கடந்த 8-.9.-2021 அன்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில், குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­திற்கு எதி­ராக, அர­சின் சார்­பாக நான் ஒரு தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்து, அதனை

நிறை­வேற்றி, இச்­சட்­டத்­தி­னைத் திரும்­பப் பெற­வேண்­டு­மென

வலி­யு­றுத்தி ஒன்­றிய அர­சுக்கு அதனை அனுப்பி வைத்­தோம். தமிழ்­நாட்­டைப் போலவே, பல்­வேறு மாநி­லங்­க­ளும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்­துள்­ளன.!


இந்த நிலை­யில், உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் கண்­ட­னத்­தி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக மக்­களை திசை­ தி­ருப்­பும் நோக்­கத்­து­டன், தேர்­தல் அர­சி­ய­லுக்­காக இந்­தச் சட்­டத்தை தற்­போது நடை­மு­றைக்­குக் கொண்டு வந்­துள்­ளதோ என கருத வேண்­டி­யி­ருக்­கி­றது

இந்­திய மக்­க­ளி­டையே பேதங்­க­ளைத் தோற்­று­விக்க வழி­வகை செய்­யும் இந்­தச் சட்­டத்­தால் எந்­த­வி­த­மான நன்­மையோ, பயனோ இருக்­கப் போவ­தில்லை. இந்­தச் சட்­டம் முற்­றி­லும் தேவை­யற்ற ஒன்று என்­ப­து­டன், இரத்து செய்­யப்­பட வேண்­டி­யது என்­ப­து­தான் இந்த அர­சின் கருத்­தா­கும்.!

ree

எனவே, ஒன்­றிய அரசு நிறை­வேற்­றி­யி­ருக்­கும் குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை தமிழ்­நாட்­டில் நிறை­வேற்­ றிட தமிழ்­நாடு அரசு எவ்­வ­கை­யி­லும் இட­ம­ளிக்­காது; இந்­திய நாட்­டின் ஒற்­று­மைக்கு பங்­கம் விளை­விக்­கும் எந்­த­வொரு சட்­டத்­திற்­கும் தமிழ்­நாடு அரசு இடம் கொடுக்­காது என்­ப­தனை தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நான் இந்த நேரத்­தில் உறு­தி­யா­கத் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.!


இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page