ஈரோடு கனமழை பாதிப்பு!அமைச்சர் சு.முத்துசாமி முகாம் துரித நடவடிக்கை! பொதுமக்கள் பாராட்டு!
- உறியடி செய்திகள்

- Nov 8, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் மணவை எம்.எஸ்.ராஜா.......
ஈரோடு கனமழை பாதிப்பு!அமைச்சர் சு.முத்துசாமி முகாம் துரித நடவடிக்கை! பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை, கனமழை, என பெய்து வருகிறது.
இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையுடன் முன் எச்சரிக்கை தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் தி.மு.கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகுந்த கவனமுடன் முன்னெடுத்தும் வருகின்றது.
மழை சேதங்கள், வெள்ள அபாயங்கள் குறித்த அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர் பெருமக்கள் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், மக்களை காக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தியும் வருகின்றார்கள்.!
அதேசமயம் மழை வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிக்கு நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான உதவிகள், நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டும் வருகின்றார்கள்.!

ஈரோடு மாவட்டம் ,ஈரோடு மாநகரத்திற்குஉட்பட்ட அன்னை சத்யா நகர், பூம்பூர் நகர், சூளை,ஆகிய பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று உடனடி தீவிர நடவடிக்கைகளை மேற்க்கொண்டார்.!


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தேவையான உடனடி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு அப்பகுதியிலே முகாம் இட்டு பணிகளையும் துரித படுத்தினார்.!

தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளை பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி உணவு, மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினார்.
தங்களோடு பேரிடர்காலத்தில் தகவல் கிடைத்த சிறிது நேரத்திலே தங்களது பகுதிக்கு நேரில் வந்து தேவையான உதவிகளை செய்து தந்த அமைச்சரை அப்பகுதி. பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெகுவாக நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்!
.

மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்காரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்கிருஷ்ணமூர்த்தி,, மாநகராட்சி துணை மேயர் V.செல்வராஜ் ஈரோடு மாநகரச் செயலாளர் மு. சுப்ரமணியம் ,மற்றும் மண்டல குழு தலைவர் ப.க. பழனிச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக மாநில மாவட்ட, மாநகர ,பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் ,கழக மகளிர் அணியினர் உள்ளிட்ட கழக சார்பு அணியினரும் உடன் சென்றனர்.!
மூத்தப் பத்திரிக்கையாளர்.
மணவை எம்.எஸ்.ராஜா...




Comments