ஈரோடு:உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்! மக்கள் பணியில் அதிகாரிகள் ஆர்வமுடன் பணியாற்றுங்கள்!
- உறியடி செய்திகள்

- Aug 4, 2024
- 2 min read

பகுத்தறிவுபகலவன், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கட்சியினர் - பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றாார்கள்.!

தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு சிறப்புத்திட்ட செயலாக்க த்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.!

முன்னதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஈரோடு சோலார் ரவுன்டானா பகுதியில் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், ஈரோடு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளத்தையும் திறந்து வைத்தார்!




விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் நம் தடகள வீரர் - வீராங்கனையரின் எண்ணம் ஈடேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இழை ஓடுதளம் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கட்டும். என்று வாழ்த்தி பேசினார்.!
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு வசதிகளையும் ஆய்வு செய்தார்.!
விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்துக்களையும் கூறினார்,!
தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டானின்,மனதுக்கு நெருக்கமான ‘நான் முதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களால் பயன்பெற்று வரும் மாணவ – மாணவியருடன் கலந்துரையாடினார்.!

அப்போது பெற்றோரை இழந்ததால் உயர்கல்வி எனும் கனவு கைகூடாமல் போய்விட, திருமணம் – குழந்தைகள் என்றான பின்பும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவியால் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருக்கும் கவுந்தம்பாடி பிரேமா…

அரசுக் கல்லூரியில் தமிழ் படித்தாலும், நான் முதல்வன் திட்டம் மூலம் Communicative English கற்றுத் தேர்ந்த அறிவானந்தம்…
இப்படி இன்னும் பல முதல்தலைமுறை பட்டதாரிகளின் வாழ்வில் புதுமைப்பெண்ணும் – நான் முதல்வனும் ஒளியேற்றி வைத்திருக்கின்றன.

இத்திட்டங்கள் தந்த ஏற்றத்தால் மகிழ்ச்சியும் – உற்சாகமும் பொங்க நம் இளைஞர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள், நெகிழ்ச்சியைத் தருவதாக கூறினார்.!
விரைவில் வரவுள்ள ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், இன்னும் பல தலைமுறைகளை கைதூக்கி விடும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் , நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற்ற 3,784 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன கடிதங்களை வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்..!


தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவின் போது, ரூ.20 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் அமைய உள்ள பன்னோக்கு விளையாட்டு வளாகக் கட்டிடத்திற்கும், ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைய உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்!..

மேலும், பள்ளிக் கல்வித்துறை - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள பல்வேறு கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.!
இப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினார்.!

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் கோட்டை முதல் குமரி வரை சீராக சென்று சேருவதை உறுதி செய்ய ஆய்வுகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பில் நடத்தி தமிழக முதல்வரின் வழிகாட்டு லின்படி பல்வேறு ஆலோசனைகள், அறிவுறுத்தங்களையும் வழங்கி வலியுறுத்தி பேசினார்.!

மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் முதல் வட்டம், ஒன்றிய அளவில் பணியாற்றுகிற அலுவலர்கள் வரை பங்கேற்ற இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், ஒவ்வொரு நிலையாக மக்களைச் சென்றடையும் விதம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.!

தி.மு.கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை, அவற்றை விரைந்து முடிப்பதற்கான செயல்பாடுகளை அதிகாரிகள் – அலுவலர்கள் விளக்கிக் கூறினர்.!
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் அதிகாரிகள் – அலுவலர்கள், மக்கள் மகிழும் வண்ணம் அரசுத் திட்டங்களை உடனுக்குடன் கொண்டு சேர்த்திட ஆலோசனைகளை வழங்கினார்..!.

இதனையடுத்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழக இளைஞரணி சார்பில் இல்லந்தோறும் இளைஞரணி மூலம் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணியை பெருந்துறை மேட்டுக்கடையில் தொடங்கி வைத்து, பணிகள் சிறப்புற வாழ்த்தி பேசினார்.!
மாவட்ட தி.மு.கழகச்செயலாளர்கள், தமிழ்நாடு வீட் வசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், சு.முத்துசாமி, செய்தி - விளம்பரத்துறை அமைச்சா மு.பெ.சாமிநாதன், மற்றும் நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக நிர்வாகிகள், மாவட்ட அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் பிரதிகளும் கலந்து கொண்டார்கள்.




Comments