top of page
Search

அப்பாடா! ஒரு வழியா பா.ம.க.மௌனம் கலைத்தது! நீட் தேர்வு, பாஜக, மோடி அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 10, 2024
  • 2 min read
ree

தோகமலை

ச.ராஜா மரியதிரவியம்.


எல்லாமே தனக்கு வரும் போது தான் தெரியும் முனு சும்மாவா சொன்னார்கள்!

மெளனம் கலைத்த பா.ம.க.!

நீட் தேர்வு: தமிழக மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம்!

ஒன்றிய மோடி அரசுக்கு மரு.. அன்புமணிகண்டனம்!


தமிழ்நாட்டு மாணவிக்கு ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது, குளறுபடி நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.!


நீட் தேர்வை எதிர்த்து அதில் பல் வேறு குளறு படிகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.கழகம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டணங்களை எழுப்பி நாடாளுமன்றமே அல்லோல பட்டநிலையில், ஒன்றிய மோடி தலைமையிலானை பாஜக அரசை இது நாள் வரை விமர்சிக்காத பா.ம.க. தற்போது ஒன்றிய அரசு, நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி யுள்ளது.!


தலைவலி காய்ச்சலும் தனக்கு வரும் போதுதான் தெரியும் என்பது இதுதானோ!

என்று சமூகவலை தளவாசிகள் பதிவுகளையும், பதிவிட்டு வருகின்றார்கள்.!

ree

இது குறித்து பா.ம.க. தலைவர் மரு. அன்புமணிராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது!


, ‘இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.!


முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்தது. அப்போதும் தமக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி அங்கு தேர்வு எழுதச் சென்ற பின்னர், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் வெறுங்கையுடன் திரும்பிய தமக்கு பெரும் செலவு ஏற்பட்டதாகவும் அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார்.!

ree

ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் 4 மையங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் உறுதியளித்திருந்தது. ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு மீண்டும் காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் தேசிய தேர்வு மையம் அறிவித்தது.!

ree

ஆனால், தருமபுரி மாணவி உள்ளிட்ட பலருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்படவே இல்லை. பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது.;


இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு எனப் பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page