top of page
Search

100 நாள் வேலை 150 நாட்காக, தினக்கூலி௹ 400 உயர்த்தப்படும்! தி.மு.க. தேர்தல் அறிக்கை ஒரு பார்வை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 20, 2024
  • 2 min read
ree


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை, தயாரிப்புக்குழுத்தலைவர், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி, கட்சியின் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலிடம் வழங்கினார். தொடர்ந்து, தி.மு.க ழக தேர்தல் அறிக்கையினை, தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!


.அதில் இடம் பெற்றுள் 36 முக்கிய வாக்குறுதிகள் விபரம் வருமாறு :

ree

மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.. ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.. !

ree

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.. ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.. ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும். அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.. ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்..

ree

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.. இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.. தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.!


மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.. வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.. ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.. வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) எம்.எஸ்.பி செய்யப்படும்..!

ree

இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.27. (LPG) எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை –ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.ஏ.ஆர்.ஐ. (IIT, IIM, IISc, IIARI )ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.!

ree

. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும். .மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.. இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும் மினிமம் பேலன்ஸ் அபராதம் நீக்கம், சென்னைக்கு 3வது ரயில் முனையம், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் :


என்பது உட்பட தி.மு.கழக தேர்தல் அறிக்கையில்இடம் பெற்றிருந்தது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page