நிதி நெருக்கடியில் அரசு! அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உறியடி செய்திகள்

- Jan 9, 2024
- 2 min read
Updated: Jan 23, 2024

நிதி நெருக்கடி - இயற்கை பேரிடர் - ஒன்றிய அரசின் பாராமுகம்! அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 1000, பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின் அதிரடியாகஅறிவித்துள்ளார்.!
கடந்த ஆட்சியாளர்கள் நிர்வாக யின்மையால், மிகப்பெரும் சவால்கள் நிறைந்த சூழலில், தமிழ்நாட்டுமக்களின் பெருபான்மை ஆதரவு பெற்று, தமிழ்நாட்டின் முதல்அமைச்சராக தி.மு.கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியில், முதல்வரின் நிர்வாகத் திறமையால், கொடிய கொரோன நேய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தானே நேரிடையாக கொரோனா நோய் பாதிப்புக்குள்ளவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களையும், தங்கள் உயிரை பனையமாக வைத்து பணியாற்றிவந்த மருத்துவக்குழுவினரையும் தைரியமும் - தன்னம்பிக்கையும் ஊட்டியது மிகுந்த பாராட்டுக்களையும் - நம்பிக்கையையும் -வரவேற்புகளையும் தமிழக முதல்வர் மீதும் அரசின் மீதும் ஏற்படுத்தியதும்.!

இதனை தொடர்ந்து ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை மிகுந்த நிலையில், தமிழக அரசு கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சூழலில், இயற்கை பேரிடர்கள், புயல் மழை வெள்ளம் ஒரு புறமும்-அவதூரு பரப்பும் கூட்டம் ஒரு புறமும் வந்த போதும், கடும் நிதி நெருக்கடியை மிகத்திறமையாக கையாண்டு, பள்ளி மாணவர்கள் காலை உணவு - மகளீர் உரிமைத்தொகை_முதல் பட்டத்தாரி மாணவியருக்கும் உதவித்தொகை, சாலைகள், மேம்பாலங்கள், புதிது புதிதாக பல்வேறு மக்கள்நலத்திட்டங்களையும் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.



முதல்வரின் கொள்கை வழியில், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் - சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், மக்கள் பணியில் அரும்பாணியாற்றியும் வருகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!

கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், தற்போது அனைவருக்கும் பொங்கள் பரிசு தொகுப்பை தமிழ்நாட்டின்முதல்வர் - தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்க அதிரடியாகஉத்தரவிட்டுள்ளார்.!


2024- ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.!
இந்த நிலையில், அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அரிசி மற்றும் பொருளில்லா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.!
பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.!


ஏற்கெனவே, அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரா்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் டோக்கன் விநியோகம் விரைவாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்கள் வசிக்கும் தெருவின் அடிப்படையில், குறிப்பிட்ட தேதியில், நியாயவிலைக் கடைக்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஜன.9-ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.!
டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பொங்கல் திருநாளுக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அனைவருக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.




Comments