ஆளுநர் பதவி ராஜினாமா! மீண்டும் தேர்தல் அரசியல், களம்! தக்கவைப்பாரா - தவற விடுவாரா? தமிழிசை!
- உறியடி செய்திகள்

- Mar 18, 2024
- 1 min read

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவதாகவே அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.!
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தராஜன், “ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தீவிர அரசியலுக்கு வருகிறேன்.!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறேன். தொகுதி குறித்து பாஜக, தலைமை அறிவிக்கும்,” என்று கூறினார்.!
தமிழகத்தில் பாரம்பரியமிக்க காங்கிரஸ்கட்சி குடும்பத்தை சேர்ந்த மருத்துவரான தமிழிசை செளந்தரராஜன் கடந்த கால தேர்தல் அரசியல் பயணத்தில் 2006.ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் 2009ம் ஆண்டு வட சென்னை மக்களவை தேர்தல் 2011ம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்ற தொகுதியிலும், அதை தொடர்ந்து 2016 ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டும், தோல்வியடைந்தார்.!

கடந்த 2019 ம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு, தி.மு.கழக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.!
இந்நிலையில் பாஜக தலைமை தமிழிசை சௌந்தரராஜனை கடந்த 2019 ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி 2021ல் நீக்கப்பட்டதையடுத்து தெலங்கானா கவர்னராக பதவி வகித்து வந்த தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை நிலை பதவியும் வழங்கப்பட்டது.!
இந்நிலையில் தனது ஆளுநர் பதவியை ராஜினா செய்து விட்டு, மீண்டும் தேர்தல் அரசியல் களம் காண வருவதாக கூறியுள்ள தமிழிசை, இம்முறை தேர்தலில் வெற்றியை தக்க வைப்பரா ? தவற விடுவாரா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
என்கின்ற குரல் அரசியல் - ஊடக வட்டாரத்தில் ஒலிக்கே வே செய்கிறது.!




Comments