top of page
Search

தாத்தா சொல்லை தட்டாத பேரனோ ? பெங்களு திரும்பும் பிரஜ்வால் ரேவண்ணா கைதாவாரா?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 30, 2024
  • 1 min read
ree

தாத்தா தேவ கெளடா பேச்சை தட்டாமல் பெங்களூர் திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவரா ? கர்நாடக அரசியலில் பரப்பரப்பு.!


கர்நாடகாவில் பாலியல் புகார் விவகாரத்தில் நாளை பெங்களூரு திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யபடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.!


கர்நாடக மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி மதசார்பற்ற ஜனதா தள எம்.பியாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் உருவாக்கியது.!

ree

இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை கர்நாடக மாநில அரசு அமைத்துள்ளது.!

மக்களவை தேர்தலில் பாஜவுடன், மஜத கூட்டணி அமைத்துள்ளதால், இந்த விவகாரம் அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.!

இந்நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது.!


அங்கு பல இடங்களில் மகளிர் காங்கிரசார், பிரஜ்வாலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த பாலியல் விவகாரம் கர்நாடக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பாஜவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.!

ree

எனவே பிரஜ்வல், மஜத கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று விட்டதாகவும் . அதன் பின்னர் திரும்பவில்லை. வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.!


அதே சமயம், இந்த குற்றச்சாட்டை பிரஜ்வல் மறுத்திருக்கிறார். தேர்தல் முடியும் வரை என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், எனது பயணம் திட்டமிடப்பட்டதுதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.!

இதற்கிடையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்காக பிரஜ்வல் நாளை ஆஜராக இருக்கிறார் என தகவல்கள் வைரலாகியுள்ளது.!


இதற்காக அவர் பெங்களூர் வர இருப்பதாக வெளிநாட்டின் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.!

இப்படி பட்ட சூழலில் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானன பட் விசாரணைக்கு எடுத்துள்ளார்.!

ree

அதே நேரம், வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி, க்கு தனது ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை வழங்குவதாகவும் கூறி, வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்திருக்கிறார்.!


எஸ்ஐடியின் வாதங்கள் மற்றும் பிரஜ்வல் வழக்கறிஞரின் வாதங்களுக்கு பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்குவார். இருப்பினும், இந்த வழக்கு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளதால், பிரஜ்வல் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.!


பிரஜ்வால் சம்பவத்தில்,, அவரின் தாத்தா தேவ கெளடா, தனது சொல்லை கேள். உடனடியாக நேரில் வந்து பிரச்சனைகளை சட்டப்படி எதிர்கொள் என்று கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page