top of page
Search

தமிழ்நாட்டில் வரி கொடுக்கவில்லை என்றால்! பாஜக, மோடி அரசு செயல்பட முடியுமா? கனிமொழி கருணாநிதி கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 27, 2024
  • 2 min read
ree

தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என சொன்னால் மோடியால் நாட்டை எப்படி வழி நடத்த முடியும்? என்று தூத்துக்குடியில் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில்

கனிமொழி கேள்வி எழுப்பினார்!


மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

ree

நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகம் சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில பாஜக, ஆதரவு மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டிருந்தது.. !

ree

பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக, மோடி அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.!


தூத்துக்குடியில் தி.மு.கழக எம்பி கனிமொழி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

ree

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி கருணாநிதி பேசுகையில்:


மைனாரிட்டி மக்களுக்கு எதிராக இருக்ககூடியவர்கள் மைனாரிட்டி பாஜக. அரசு.!

அந்த மைனாரிட்டி ஆட்சியில், பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க வேண்டும் என்றால், பாஜக ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்றால், பிஹார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள், அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள், அக்கட்சிகளின் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.!

ree

இந்த இரண்டு மாநிலங்களின் மேல் அவர்களுக்கு அக்கறை இருப்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக ஆட்சியில் இருக்க அந்த இரு மாநிலங்களின் தயவு தேவை. அந்த தயவுக்காக பாஜக, அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுக்க தயராக இருக்கிறது. இப்படி தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார்.!

ree

தேர்தலுக்கு முன்பு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்த மோடி, தான் தமிழனாய் பிறக்கவில்லையே என்று வருத்தப்பட்டு, திருக்குரலை பற்றிய யெல்லாம் பேசி, தமிழகர்கள் நாகரீகம், கலாசாரம் பண்பாடுகள் பற்றியும் பேசிய பிரதமர் மோடியின் ஆட்சியில், பட்ஜெட்டில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்கிற பெயர் கூட குறிப்பிடாதது ஏன்?


தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என சொன்னால் மோடியால் நாட்டை எப்படி வழி நடத்த முடியும்? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பி பேசினார்.!

ree

சென்னையில் பாரிமுனை மற்றும் கிண்டி உள்ளிட்ட இரண்டு இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்துக்கென எவ்வித சிறப்பு திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படாததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.!


சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மயிலை வேலு, பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், வழக்கறிஞர் கணேஷ் பாண்டியன், உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். !

ree

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தி.மு.கழக எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.!

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.!

ree

திருச்சியில், தி.மு.க முகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மேயர் , எம்.எல்.ஏ.க்கள், மணச்சநல்லூர் கதிரவன், துறையூர் ஸ்டாலின் குமார், ஸ்ரீரங்கம் பழனியான்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.!


மேலும் மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page