நாடாளுமன்றத்தில்!கனி மொழி கருணாநிதி எம்.பி. ஆவேசம்! நீட், இந்தி திணிப்பு, குல கல்வி ஏற்க முடியாது!
- உறியடி செய்திகள்

- Aug 2, 2024
- 2 min read

உலகத்திலேயே மொழிப் போராட்டங்களில் பல நூற்றுகணக்கானோர் உயிர்த் தியாகம் செய்த ஒரே இடம் தமிழ்நாடுதான்.!
.. நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த பங்களிப்பும் செய்யாத பாஜகவுக்கு இந்த வரலாறு தெரியுமா? மொழிக் கொள்கை பற்றி பாஜக பேசலாமா? லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி கண்டனம்! சராமாரி கேள்வி!

லோக்சபாவில் . நாடாளுமன்ற தி.மு.கழக துணைச் செயலாளர் இரு அவைகளின் குழுத் தலைவர்
கனிமொழி கருணாநிதி எம்.பி நேற்று பேசியதாவது:
கேந்திரிய வித்யாலயாக்களில் மாநில மொழியைக் கற்றுத் தருவதாக சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் நாங்கள் கோரிக்கை வைத்து, கெஞ்சி போராடினால்தான் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கின்றீர்கள் தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பளிகளில் 15-ல் தான் தமிழ் மொழி சொல்லித்தரப்படுகிறது. நீங்கள் எல்லாம் மொழிக் கொள்கையில் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என எப்படி நாங்கள் நம்புவது?
ஒருவரின் ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது.? எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்காக குரல் கொடுத்த ஒருவரின் ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை கிடைக்க போகிறது.?
ரயில்வே நிலையத்தில் போய் டிக்கெட் வாங்க முடியாத நிலை தான் உள்ளது.!

அங்கேயும் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இந்த அரசாங்கம்தான் எங்கள் மீது இந்தியை மட்டுமல்ல சமஸ்கிருதத்தையும் திணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வழியிலும் இந்த திணிப்பு நடத்தப்படுகிறது.!

உன் சாதி உனக்கு தெரியாது என கூறுபவரை பிரதமர் மோடி ஆதரிக்கின்றார்.!
எங்களுடைய கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1.16 லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் பயனடைகின்றனர். மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்ததும் தமிழகம் தான் என்கிற பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்வோம். நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ11,600 கோடி. இதில் குழந்தைகளுக்கு உணவு தரக் கூடிய திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ10,000 கோடி. இந்த திட்டத்துக்கு கூட போதிய நிதி ஒதுக்காத நீங்களா எங்களுக்கு கல்வியைப் பற்றி சொல்லித் தருகிறீர்கள்? நாங்கள் இதனை ஏற்க வேண்டுமா?
குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் சிறிய ஊர்களிலும் கல்லூரிகளை கொண்டு வந்தவர்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைகிறது
நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை ஒன்றிய அரசு சிதைக்கிறது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.!

மாநில உரிமைகளையும் ஒன்றிய அரசு பறிக்கிறது:
புதிய கல்விக் கொள்கையில் விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்து பிள்ளைகளின் கல்வி வாய்ப்பைப் பறித்து எந்த குலக் கல்வியை திராவிட இயக்கமும் தி.மு.கழகமும் கொள்கை ரீதியாக எதிர்க்கிறதோ அதே குலக் கல்வித் திட்டத்தைத்தான் திணிக்கிறீர்கள்.. எங்கள் பிள்ளைகளின் கல்வியை எதிர்காலத்தை நாசமாக்க துடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியான புதிய கல்விக் கொள்கையை எங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்பி பேசினார்.




Comments