top of page
Search

சவுக்கு வழக்கில்! நீதிமன்ற தீர்ப்பும்! சமான்யர்களின் எதிர்பார்ப்பும்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 26, 2024
  • 3 min read
ree


சவுக்கு வழக்கின் விசாரணை! மர்மம் விலகுமா?


நீதியர் ஜி.ஆர், சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? தலைமை நீதிபதி, நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் வழியாக உண்மைகளை உலகறிய சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க சமான்யர்கள் தொடர் வலுயுறுத்தல்.!


பெண் போலீஸார் குறித்து தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசை மட்டுமல்லாமல், திமுக குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை சவுக்கு சங்கர் வைத்து வந்தார். இந்த சூழலில்தான், பெண் காவலர்களையும், ஒரு போலீஸ் உயரதிகாரியையும் பற்றி ஒரு யூடியூப் சேனலில் மோசமாக விமர்சித்தார் சவுக்கு சங்கர். இதுதொடர்பான புகாரின் பேரில் தான் சவுக்கு சங்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.!

ree

அதே சமயம் முன்பு நீதியரசர் குடியிருப்பில் உதவியாளர்களா கயிருந்த பெண்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த நிகழ்வில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் சுயமோட்டா வாக வழக்கு பதிந்து ஒரு வருட தண்டனைக்கு உட்படுத்தினார். பின்னர் இடையில் சவுக்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து பிணையில் வெளி வந்தார். அதன்படி நடந்து கொண்டாரா என்பது தனி தொடர் கதை என்கின்றார்கள் விபரமறிந்த பலர்.!


இதனை தொடர்ந்து காவல்துறையினர், அங்கு பணியாற்றும் பெண்கள். பத்திரிக்கையாளர்கள் என்று, வழக்கமான தனது பாணி அவதூறு விமர்சனங்களை கடுமையாக, தொடர்ந்து தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து தேனி, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தொடர்வழக்குகளும் சவுக்கு மீது பாய்ந்தது.!


ஒரு கட்டத்தில் சவுக்கின் கடந்த கால - நிகழ்கால நடவடிக்கைகளை கண்காணித்ததாகவும், சென்னை காவல் ஆணையாளர் சவுக்கால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை எழுக் கூடாது என்று (உதாரணம் போக்குவரத்து - காவல்துறையினரின் தற்போதைய நிகழ்வும் என்றும் குறிபிடுகின்றனர் ) குண்டர் தடுப்பு சட்டத்திலும் சவுக்கு உட்படுத்தப்பட்டார்.!

ree

அதன் பிறகு அவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பாய்ந்தன. இதையடுத்து, அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளும் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டதால் அவர் அண்மையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.!


முன்னதாக, சிறையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் கை உடைந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் கோவை சிறை நிர்வாகம் இதை முழுமையாக மறுத்தது.!

இதனை உறுதிபடுத்தும் விதமாக ஒரு கட்டத்தில் சவுக்கும் காவலர்கள் தன்னை தாக்கவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.!


இதனிடையே, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் விசாரித்து வந்தனர்.!


இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவில் கஞ்சா வழக்கை குறிப்பிடப்படாததை சுட்டிக்காட்டிய நீதியரசர் ஜி.ஆர், சுவாமிநாதன், உரிய கவனம் செலுத்தாமல் இந்த குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதாகவும் நீதியரசர் தெரிவித்தார். மேலும், அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் உத்தரவிட்டார்.!

ree

மற்றொரு நீதிபதியான பாலாஜி அரசின் பதில் கிடைத்த பின்னரே வழக்கு தொடர்பான முடிவுக்கு வர முடியும், என்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக,முரணான தீர்ப்பை வழங்கினார்.!


இதனைதொடர்ந்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முன்னதாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவை வாசிக்கும் போது அதில் குறிப்பிட்ட வார்த்தையை அழுத்தமாக கூறினார்.!

தொடர்பாக சில அதிகாரமிக்க நபர்கள் தொடர்ந்து என்னிடம் பேசி அழுத்தம் வந்ததாலேயே, இதனை அவசர வழக்காக நாங்கள் எடுத்தோம்" என அவர் கூறினார்!

ree

நீதிபதி கூறியதை பார்க்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகளிடம் பேசி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்!

ஏற்கனவே சவுக்கு சங்கர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அதிமுக - பாஜக உள்ளிட்டவர்கள் சவுக்குக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எடுத்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் நீதியரசரின் கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்க வேண்டியுள்ளது..!

ree

அப்படிபட்ட

உயர்நீதிமன்றத்தில், நீதி பரிபாலங்களை, பல்வேறு தீர்ப்புகளிலும், அவர் சுயமேட்டா வாக எடுத்த வழக்கின் முடிவுகளிருந்தும் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் எந்த அளவுக்கு சட்டத்தை போற்றி, நீதிமன்றத்தின் மாண்பை காத்து, வழக்கின் தன்மைகளை சட்ட ரீதியாக நன்கு ஆராய்ந்து நீதியை வழங்குவதில் எத்தகைய சூழலும் பின்வாங்காமல் இன்று வரை தளராது முன்னெடுத்து வருபவர் என்கிற கருத்தையும் இந்த இடத்தில் நாம் முழுமையாக உள்வாங்க வேண்டிய கடமை மிக்க இந்திய குடிமகனாய் உள்ளோம்.!


இதனை முழுமையாக அனைத்து தரப்பினரும்உணர்ந்துள்ள நிலையில், நீதியரசரின் நீதி வழங்கும் பணியில், இவ்வழக்கு தொடர்பாக பல மிக்க இருவர் அவருக்கு, சவுக்கு சங்கர் வழக்கு விசயத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை, எத்தகைய நிலையாலும் அறவே ஏற்க இயலாது!


எனவே, தலைமை நீதியரசர் தாமாக முன்வந்து, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனை நெருக்கடிக்கு ஆளாக்கிய பலம் மிக்க நபர்கள் மீது நீதிமன்ற அவதிப்பு உள்ளிட்டசட்ட ரீதியான உரிய முகாந்திரம் இருப்பதால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.!,

ree

பல்வேறு சமூக பொது நல , அரசியல் சார்புசம்பவங்களை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து மக்களின் பேராதரவையும், நீதியும் மீதும் நீதிமன்றங்களின் மாண்பை காத்திடும் வகையில் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதனே உரிய வழக்கை முன்னெடுத்து சவுக்கு வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற மாண்பை கேலி கூத்தாக்க நினைத்த அந்த இரு நபர்களை உலகுக்கும், மக்கள் மன்றத்திற்கும் அடையாள படுத்தி உரிய சட்ட நடவடிக்கையும் வேண்டும் என்பது அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட சாமானியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.!


தலைமை நீதியரசருக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், சவுக்கு வழக்கை பொருத்தமட்டில். சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட ஆர்வமுள்ள பொது நல அமைப்பினர்களோடும் மக்களோடும் நாமும் கரம் கோர்த்து ஆதரவளிக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது.!


நன்றி. புதியதலைமுறை.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page