விக்கிரவாண்டியில்: வெற்றியை தக்க வைத்த தி.மு.கழகம்! பின்னோக்கி சென்ற பாமக! டெபாசிட்டை இழந்த நாதக!
- உறியடி செய்திகள்

- Jul 13, 2024
- 2 min read

பாமக, வின் செல்வாக்கு மிக்க பகுதி என்று கூறப்பட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது,!
தொடர்ந்து அந்தத் தொகுதியை தி.மு.கழகம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.!
பின்னோக்கி சென்ற பாமக .!, , டெபாசிட்டை இழந்த நாதக.!
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்
67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.!
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், கையெழுத்து இல்லாத வாக்குகள் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.!
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தி.மு.கழக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார்.!
பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகளும் பெற்றார்கள்.!

தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.!
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே இண்டியா கூட்டணி,தி.மு.கழக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.!

பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும் . நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றார்கள்.!
நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது.!
67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.!
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழக வேட்பாளரான புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் 93,730 வாக்குகள் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளரை விட திமுகவின் புகழேந்தி 9573 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 72,188 வாக்குகளும், அதிமுகவின் பாக்கியராஜ் 65,365 வாக்குகளும் பெற்றிருந்தனர்.!
தற்போதய விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.கழகம் பெற்றுள்ளது.! தொடர்ந்து 3 தேர்தல்களாக இந்த தொகுதியை தி.மு.க தக்க வைத்து வருகிறது.!

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த முதல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளார் கந்தசாமி 2921 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.! கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8616 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.! விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 8362 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.!
இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் டெபாசிட்டை பறிகொடுத்தார்.!
என்பது குறிப்பிடத்தக்கது.!




Comments