ரகசியஇடத்தில் விசாரணை! அதிர்ச்சி - கலக்கத்தில் சவுக்கின் சகாக்கள்!
- உறியடி செய்திகள்

- May 17, 2024
- 1 min read

சவுக்கு சங்கரிடம் ரகசிய இடத்தில் விசாரணை!
சவுக்கு ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்த நிலையில், அவரிடம் ரகசிய இடத்தில் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.!
இதனால் அவருக்கு நெருக்கமான அரசு, அரசியல் கனமா மாபியாக்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி!
பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கர், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.!
இந்நிலையில் போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.!
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த், வழக்கின் உண்மைத் தன்மை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.!

இதனைதொடர்ந்து, ரகசிய இடத்தில் சங்கரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மேலும் பல தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டு வெளிவரலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.! விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் சங்கர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.!

ரகசிய இடத்தில் சங்கரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையால், அவருடன் நெருக்காமாகயிருந்த, அரசியல், அரசு, காவல், பிற அரசு துறையை சேர்ந்தவர்களும், கனம மாபியாக்கள் பலரும் பீதியிலும், கலக்கத்திலும், அதிர்ந்து போயிருப்பதாகவும் அரசியல், ஊடக, வட்டாரங்களில் தகவல்கற்கசிய தொடங்கியுள்ளது.!




Comments