முதல்வர் குறித்து தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? அமைச்சர் கே.என்.நேரு காட்டம்!
- உறியடி செய்திகள்

- Aug 22
- 1 min read

நேற்று தவெக மாநாட்டில் ஸ்டாலினை விஜய் அங்கிள் என விமர்சித்ததற்கு அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார்.
திருச்சி கலைஞர் திருமண மண்டபத்தில் தனி வீட்டு மனை.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு தெரிவித்ததாவது;- த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரே அங்கிள் என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் சொல்வது தரம் தாழ்ந்த விமர்சனம் என்றார்.

இதற்கு வரும் காலங்களில் மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்கன்னா எது வேணாலும் பேசுவது சரியாக இருக்குமா, சரியாக இருக்காது என பதிலளித்தார். திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் குறித்து கேட்டபோது, காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும். ஏற்கனவே ஒரு மந்திரி சூடுபட்டது போதாதா நாங்க சூடுபடனுமா அது அங்கே தான் இருக்கும் இவ்வாறு கூறினார்.




Comments