top of page
Search

கட்சி தொடங்க இவ்வளவு பிரச்சனையா? நடிகர் விஜய் வந்த கார் - கட்சி கொடி சர்ச்சை! பரப்பரப்பு தகவல்கள்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 22, 2024
  • 2 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம் .....


நடிகர் விஜய் கட்சிக் கொடி சர்ச்சையானது!

யானைகள் இடம்பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.! சட்டரீதியாகவும் எதிர்கொள்ள தயார் என்றும் கூறப்பட்டுள்ளது!


இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், “1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.!

ree

இதனால் அக்கட்சித் தலைமையை தொடர்பு கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் மத்திய தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டது. அதனடிப்படையில் தவெக நிர்வாகி வெங்கட் என்பவரை தொடர்பு கொண்டோம். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்ட ஆவணங்களையும் மத்திய தலைமையின் அறிவுறுத்தல்படி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கின்றார்கள்!

ree

இந்த வீடியோவை பதிவேற்றி கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆனந்தன் கூறியிருப்பதாவது: “சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாக பரப்பரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.!


இன்றைய கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த கார் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ree

ஏற்கனவே

சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்திற்கு டி.என். 37 டி.ஆர் 1111 என்ற எண் உடைய, டொயோட்டா இனோவா கிரிஸ்டா காரில் வந்து இறங்கிய விஜய், கட்சி கொடி மற்றும் அதற்கான பாடலை அறிமுகம் செய்து வைத்தார். விஜய் வந்த அந்த கார் மீது ரூ4500 அபராதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ4700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசியாக விதிக்கப்பட்ட ரூ200 மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.!

ree

இதனையடுத்து அபராதத்தொகை ரூ4500 நிலுவையில் உள்ள நிலையில், விஜய் தனது கட்சி கொடி அறிமுக விழாவிற்காக அபராதம் கட்டாத காரில் கட்சி அலுவலகம் வந்துள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்த கார், கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page