கடலூரில் பா.ம.க.தேர்தல் தோல்வி காரணமா! பொங்கி எழுந்தார! திட்டி தீர்த்தாரா இயக்குநர் தங்கர்பச்சான் !
- உறியடி செய்திகள்

- Jun 18, 2024
- 2 min read

கடலூர் லோக்சபா தொகுதியில் பாஜக, பாமக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், 3வது இடம் பிடித்து தோற்றார். ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார்.
அப்போது அவர், 'எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு' என கோபமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!
தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.!
தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர்.!
தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார்.! அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது:
என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.!
அரசியலை தூய்மையாக்கவே நான் வந்துள்ளேன். வெற்றி, தோல்வி எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது.
யார் எப்படியோ என்னுடைய மக்களை விட்டுவிட்டு நான் போக முடியாது. மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி பாமக. ஆளுங்கட்சியினர் மக்களுக்காக வரமாட்டார்கள். அவர்களுக்கு மணல் திருட்டு, காண்டிராக்ட் எடுப்பது, சாராயம் விற்பது என பல வேலைகள் இருக்கு.!
மக்களாகிய நீங்களும் ஊமையா இருங்க. ஒருநாள் போராட்டம் நடத்துங்க.. வாய் இருக்குல்ல.. வாயை வச்சிகிட்டு என்ன பண்றீங்க? போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? ஓட்டை வச்சு என்ன செய்ய போறீங்க? வாய் இருந்தா தான் பிழைக்க முடியும்.!

இல்லைனா உங்க பிள்ளைங்களும் அந்த சின்னங்களுக்கே ஓட்டு போட்டு அடிமையாகி செத்தே போயிடும். உங்களுக்கு தேர்தல்லாம் விளையாட்டா இருக்கு. நல்ல உடை உடுத்திக்கொண்டு, மேக்கப் போட்டுக்கொண்டு, விரலில் மை பூசிவிட்டு, வீட்டில் வந்து டிவி பார்ப்பது தான் தேர்தலா?
தேர்தல் கொண்டாட்டம் எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர்களின் வேலையை பார்க்கின்றனர் .
நீங்கள் உங்கள் வேலையை பார்க்கிறீர்கள்.
எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது. அதை தேர்ந்தெடுப்பது இதுவரை உங்களுக்கு தெரியல. எனக்கு இது அவசியமற்ற ஒன்று. இனிமேலாவது மாறுங்கள். எனக்கு இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு. என்னை மதித்து ஓட்டளித்தவர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.! இவ்வாறு அவர் பேசினார்.!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களிடம் பேசிய தங்கர்பச்சானின் பேச்சு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்து மோ என்று பாஜக. பாமக, வினர் கலக்கத்திலுள்ள அப்பகுதி தகவல்கள் வைரலாகி வருகிறது.
இவர் எந்த கட்சிக்கு ஒட்டு போடக்கூடாது என்கிறார் . ராமதாசும் அன்புமணியும் கடைசிவரை அதிமுகவோடு பேச்சவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள் கடைசியில் பேரம் படியவில்லையா அல்லது பாஜகவின் அழுத்தமா இல்லை கவனிப்பா தெரியவில்லை பாஜகவுக்கு கூட்டணியை மாற்றினார்கள் . மோடியையும் பாஜகவையும் ராமதாஸ் அவர்கள் எப்படியெல்லாம் திட்டியிருப்பார் , குறை கூறியிருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே , !
இன்னமும் பாமக , திமுக வுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதற்கு யாரும் உத்திரவாதம் தரமுடியாது , அப்படியிருக்க இவர் எப்படி அடுத்தவர்களுக்கு ஒட்டு போடுவதால் அவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று கூற என்ன அருகதை உள்ளது . சினிமாக்காரன் அரசியலுக்கு வருவதை எதிர்த்தவர் ராமதாஸ் , அப்படி இருக்க இவர் சிறந்த இயக்குனராக இருந்தும் ஓட்டுபோடவில்லையே என்ற குற்றச்சாட்டை எப்படி கூறமுடியும் , அய்யா ராமதாஸ் சொன்னதுபோல் சினிமாக்காரனுக்கு ஒட்டு போடாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

பொதுவாக மக்களை ஏதாவது ஒரு கஷ்டத்தில் வைத்துக் கொண்டு இந்த சமுதாயம் உழல்வதால் மக்களால் ஒரு எல்லைக்கு மேல் சிந்திக்கவில்லை.
நல்ல கருத்து மக்கள் அன்றாட வருமானம் போல் தேர்தலில் கிடைக்கும் சொற்பத்தொகையை நினைக்கிறார்கள் என்னுடைய ஒரு ஓட்டு என்ன செய்யப் போகிறது அதற்கு ஏதாவது பணம் வாங்கிவிடலாம் சுயநல சிந்தனையை விட்டுவிட்டு என்று எண்ணம் பெரும்பாலும் வருடம் உள்ளது
அவர் கருத்துக்கு மாற்று கருத்தில்லை, சரியாகத்தான் சொன்னார். உண்மை தெரிந்தும் சரியாக ஓட்டளிக்காதவர்களுக்கும், ஓட்டே அளிக்காமல் இருந்தவர்களுக்கும் ஒரு வகையில் நன்றாக உறைக்கும்படி சொல்லியிருக்கிறார்.!
என்கிற கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.!
உரைத்தால் தானே? தானே மண்ணை வாரி தன தலையிலேயே போட்டுக்கொள்பவர்களைப் பற்றி என்ன சொல்வது. !
அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப்பற்றியோ தங்களின் சந்ததிகளின் எதிர்காலத்தைப்பற்றியோ சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை.




Comments