top of page
Search

பாஜக அரிதாரம் கலைகிறதா?புளுகு மூட்டை அவிழ்த்து விடும் மோடி! வெளுத்து வாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 17, 2024
  • 1 min read
ree

முதல்­வர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள தமது வலை­த­ளப் பதி­வில் “தன் சொந்த இய­லா­மையை மறைக்க தி.மு.க. மீது சேற்றை வாரி இறைக்­கும் கபட நாட­கத்தை எங்­கள்

மீன­வர்­கள் தோலு­ரிப்­பார்­கள்.!

இது அரி­தா­ரங்­கள் கலை­கிற காலம்”!


என்­றும் “விஷ்­வ­குரு என மார்­தட்­டிக் கொள்­ளும் பிர­த­மர் மவு­ன­கு­ரு­வாக இருப்­பது ஏன்?” என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.!


இது­கு­றித்து தி.மு. கழ­கத்­ தலை­வ­ர் தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­ச­ர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள சமூக வலை தளப் பதிவில் கூறியிருப்பதாவது.!


கடந்த காலத்­தில் தி.மு.க. செய்த பாவத்­தால்­தான் இலங்கை அர­சால் இன்று தமிழ்­நாட்டு மீன­வர்­கள் இன்­ன­லுக்கு ஆளா­கி­றார்­கள் எனப் பிர­த­மர் பத­வி­யில் இருக்­கும் மோடி கூசா­மல் புளுகி இருக்­கி­றார்.!


தி.மு.கழகழக. அர­சின், கடும் எதிர்ப்­பை­யும் மீறித்­தான் கச்­சத்­தீவு இலங்­கைக்­குத் தாரை­வார்க்­கப்­பட்­டது என்ற உண்மை வர­லாற்­றைத் தமிழ்­நாட்டு மக்­கள்

நன்­க­றி­வார்­கள்.!


நாட்­டின் ஒரு பகு­தியை மாநில அர­சால் மற்­றொரு நாட்­டுக்கு வழங்க முடி­யும் என நம்­பும் அள­வுக்­குத்­தான் பிர­த­மர் அப்­பா­வி­யாக இருக்­கி­றாரா?


கச்­சத்­தீவை மீட்கபா.ஜ.க. அர­சின் நட­வ­டிக்கை என்ன?

கச்­சத்­தீவை மீட்க கடந்த 10 ஆண்­டு­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க அரசு எடுத்த நட­வ­டிக்கை என்ன?

தமிழ்­நாட்டு மீன­வர்­கள் இலங்கை அர­சால் தொடர்ந்து சிறைப் பிடிக்­கப்­ப­டு­ வ­தை­யும் சித்­தி­ர­வ­தைக்கு ஆளா­வ­தை­யும் தடுத்து நிறுத்­தா­தது ஏன்?


அவர்­கள் இந்­தி­யர்­கள் இல்­லையா?

ree

அதானி நிறு­வ­னத்­தின் வர்த்­தக நலன்­க­ளுக்­காக இலங்கை அர­சுக்கு அழுத்­தம் தந்த ஒன்­றிய பா.ஜ.க அரசு இந்­திய மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய உரி­மைக்­காக வாய்­தி­றக்­கா­தது ஏன்?


பட­கு­க­ளைப் பறி­மு­தல் செய்து நாட்­டு­டைமை ஆக்­கி­விட்­ட­தாக அறி­விக்­கி­றது இலங்கை அரசு.!

இந்­திய அரசு இதை அதி­கா­ரப்­பூர்­வ­மாக, வெளிப்­ப­டை­யா­கக் கண்­டிக்­கா­தது ஏன்?


இரண்­டா­வது முறை­யா­கக் கைது செய்­யப்­ப­டும் மீன­வர்­க­ளுக்­குச் சிறைத்­தண்­டனை வழங்­கும் நடை­முறை என்­பதே, பா.ஜ.க. ஆட்­சிக்­கா­லத்­தில் ஏற்­பட்­ட­து­தான். இதைத் தடுக்க என்ன நட­வ­டிக்கை எடுத்­தீர்­கள்?


இதற்­கெல்­லாம் பதி­லில்லை; தமிழ்­நாடு தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தைச் சுட்­டிக்­காட்டி, தமிழ்­நாட்­டுக்­குச் செய்து கொடுத்த சிறப்­புத் திட்­டங்­கள் என்ன என்று பதில் சொல்­லுங்­க­ பி­ர­த­மரே என்று தமிழ்­நாட்டு மக்­கள் கேட்ட

கேள்­விக்­கும் பதில் இல்லை!

ஆனால், வழக்­க­மான புளு­கு­க­ளும் புலம்­பல்­க­ளும் மட்­டும் மேடை­யில் எதி­ரொ­லித்­தன.!

விஷ்­வ­குரு என மார்­தட்­டிக் கொள்­ளும் பிர­த­மர் மவு­ன­கு­ரு­வாக இருப்­பது ஏன்?


தன் சொந்த இய­லா­மையை மறைக்­கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்­கும் கபட நாட­கத்தை எங்­கள் மீன­வர்­கள் தோலு­ரிப்­பார்­கள். இது அரி­தா­ரங்­கள் கலை­கிற காலம்!”


இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தமது சமூக வலை­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page