திருச்சியில் ஜவஹர்லால் நேரு நினைவு தினம்! மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலைஅணிவித்துமரியாதை!
- உறியடி செய்திகள்

- May 27, 2024
- 1 min read

திருச்சியில் முன்னால் பாரத பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு தினத்தையெட்டி, மாவட்ட தலைவர் எஸ. ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நேற்று மே 25. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்
இந்தியாவின் தேசதந்தையும் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கபடுகிறது.!

எனவே, நிகழ்வில்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம், மகிளா காங்கிரஸ், மனித உரிமை துறை, சிறுபான்மை பிரிவு, மனித உரிமை பிரிவு, பட்டதாரி அணி, ஓ.பி.சி.பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, கலைப்பிரிவு, மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, மீனவர் அணி, இலக்கிய அணி, ஐ.என்.டி.யூ.சி. அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் அணி, ஆரய்ச்சி பிரிவு, இளைஞர் காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் (ஆர்.ஜி.பி.ஆர் எஸ்) எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்குபெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.!
இவ்வாறாக அதில் கூறப்பட்டிருந்தது.!


இதனை தொடர்ந்து இந்தியாவின் முதல் பாரத பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் நினைவு தினமான மே 27. திங்கள் கிழமை இன்று காலை 10:30 மணியளவில் திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.!

தொடர்ந்து நாட்டுக்காக ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள் குறித்தும், மாவட்டத்தலைவர் எல். ரெக்ஸ் புகழாரம் செலுத்தி பேசினார்.!
சிறுபான்மை மாநிலத் துணைத் தலைவர் பேட்டரி ராஜ்குமார், மாநில இராணுவ அணி தலைவர் ராஜசேகர், 24 வது மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மாவட்ட பொருளாளர் முரளி, (அரசு போக்குவரத்து கழகம்) தலைவர் ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் தலைவி சீலாசலஸ், ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் பாண்டியன், அமைப்புசாரா மாவட்ட தலைவர் மகேஸ்வரன், இலக்கிய அணி மாநில செயலாளர் சிவா வைத்தியநாதன், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், எட்வின் ராஜ், மலர் வெங்கடேசன், மணிவேல் அண்ணாதுரை, அழகர், உறையூர் கிருஷ்ணா, மற்றும் ஆனந்த பத்மநாபன் லட்சுமி, தமிழ்ச்செல்வன் சம்பத் கருப்பையா உறந்தை செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.!




Comments