கலைஞர் நூற்றாண்டு விழா! ரிப்பன் மாளிகையில் ௹ 75 கோடியில் மாமன்ற கட்டிடம்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
- உறியடி செய்திகள்

- Jun 22, 2024
- 1 min read

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் கூறினார்.!
தி.மு கழக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசும்போது சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.!
சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது, இதில் 200 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகரில் ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் வசிக்கின்றனர்.!
தமிழக முதல்வரின் ஆலோசனைகள், வழிகாட்டல்களுக்கு ஏற்ப சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகப்படுத்த பணிகள் நடைபெறுகின்றன.!
மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.!
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடக்கம்தெருநாய்கள் குறித்து புகார்கள் வருவதால் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.!

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் 3-வது முறையாக பிடிபட்டால் ஏலம் விடப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மறுமுறை பிடிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாய், மூன்றாம் முறை பிடிபட்டால், பறிமுதல் செய்து ஏலம் விடப்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.!

ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடம்சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.!
அண்ணா நகர் டவர் பூங்கா சர்வதேச தரத்தில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். சென்னையில் சோதனை அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கணிதவியல் பூங்கா ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.!
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
முன்னதாக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்சிகளை பேரூராட்சியாகவும் , பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.!
யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன.!
என்று அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.!




Comments