top of page
Search

தோகமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா! கடவுளின் பெயரால் மனிதர்களை பிரித்தாலசூழ்ச்சி! கொறடா செழியன் கவலை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jan 24, 2024
  • 3 min read
ree

கலைஞரின் தொகுதி குளித்தலையில் விழா!

கடவுளும் - மனிதனும் ஒன்றாகயிருந்த இங்கு

கடவுளின் பெயரால் மனிதர்களை பிரித்தாள சூழ்ச்சி! கொறடா செழியன் கவலை!


கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாட்டின் முன்னால் முதல் அமைச்சர், தி.மு.கழகத்தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா இன்று ஜன.24. புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளியின்,5. மாணவிகள். பேரறிஞர் அண்ணாவும் -முத்தமிழர் கலைஞரும், பெரியார் வழியில் முத்தமிழறிஞர். சட்டப்பேரவையில் முத்தமிழறிஞர். என்பது உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார்கள்..!

ree
ree

அனைவரையும் தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.!


அறிஞர்கள், சான்றோர்கள், என ஒட்டுமொத்த சமூகமே போற்றி புகழும், தனது இளமை காலம் முதல் கடைசிகாலம் வரை தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமத்துவம், தமிழர்களின் நலனுக்காகவே வாழ்ந்த உலகத்தில் ஈடு செய்ய முடியாத ஒப்பற்ற தலைவராக பெருமைகளை பெற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர்.!

தந்தை பெரியார்,பேரறி ஞர் அண்ணாவின் வழித்தோன்றலாய் வாழ்ந்த தலைவர் கலைஞர்வழியில் ஆட்சி பொறுப்பேற்ற, கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் வாக்களிக்காதவர்களுக்கும் பயனளிக்கும் நல்லதொரு ஆட்சியாகத்தான் இந்த திராவிட மாடல் சமத்துவ ஆட்சி யிருக்கும் என்று சூளுரைத்து அதன் ஆட்சியை அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இந்தியாவிற்கே முன்மாதிரியான ஆட்சியாக நடத்தி வருகின்றார்.!

ree
ree

விழாவில் தி.மு.கழக மாநில வர்த்தகர் அணித்துணைச்செயலாளர். தமிழ்நாடு சட்டப்பேரவையின், அரசு கொறடா கோ.வி.செழியன் பேசியதாவது.!


சட்டப்பேரவை என்றால் தலைவர் - தலைவர் -கலைஞர் என்றால் சட்டப்பேரவை என்கிற அளவுக்கு பல்வறு சாதனைகளை நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களாக செயல்படுத்தி மக்களுக்கு உண்மையாகப்பணியாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற குளித்தலை தொகுதி என்றுமே தலைவர் கலைஞரின் தொகுதிதான் என்றால் அது மிகையாகாது.!

ree

அத்தகைய பெருமை வாய்ந்த தலைவர் கலை ஞரின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களாக, ராமரும், மாணிக்கமும் சட்டமன்றத்தில் பேசும் பொழுது முத்தமிழறிஞர் தலைவரின் முதல் தொகுதியிலிருந்து மக்களுக்காக கேட்கிறோம் என்று தான் பேசுவார்கள்.!

ree

தற்போதும் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள்.

நான் திருச்சி, அரியலூர், சேலம், புதுக்கோட்டை,பெரம்பலூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை முடித்து, அவரது முதல் தொகுதியான இங்கு 55 வது நிகழ்ச்சியாக இங்கு கலந்து கொள்ள வந்துள்ளேன். பிற மாவட்ட நிகழ்ச்சிகளை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் தான் ஒரே நாளில் அதிகப்படியான பள்ளி கல்லூரியில் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். நான் கலந்து கொண்ட விழாக்களில் தலைவர் கலைஞரைப் பற்றி தெரிந்த கருத்துக்களைத்தான் பேசினார்கள். ஆனால் இங்கு நடக்கும் விழாவில் மட்டும்தான் நாங்கள் குறிப்பெடுத்தும் பல்வேறு புதிய, புதிய, கருத்துக்களை மாணவியர்கள் உணர்ச்சி பொங்க சிறப்பாக பேசினார்கள்.!

ree

இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவிகளைப் போல மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பேச்சு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.!

எனவே தான் பள்ளி கல்வியில் பல்வேறு புதிய திட்டங்களை கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் தனி கவனமுடன் செயல்படுத்தி வருகின்றார்.!

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா என்பது வெறும் சம்பிரதாய விழா அல்ல. கலைஞர் என்கிற 4. எழுத்து மாபெரும் வரலாற்று பெருமை படைத்த மந்திரச் சொல்லாகும். 5 முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக, ஒரு நாளைக்கு 24 - மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவரது காலத்தில் தான் சட்டமன்றத்தின் மரபு பேணி காத்து - நாகரீகத்துடன். எதிர்கட்சியினரும் ஏற்றுக் கொள்கின்ற புதிய பரிநாமத்தை பெற்றது.!

ree

மூன்று தலைமுறைக்கு முன்னர் கைநாட்டாகயிருந்த நம் முன்னோர்கள் இருந்த நிலையில், கல்வியை இன்னார் தான் படிக்க வேண்டும் - மற்றவர்கள் படிக்கக்கூடாது என்று போடப்பட்ட அடிமை விளங்குகளை அடித்து உடைத்தெரிந்து இன்று பாமரனும் பட்டதாரியாகலாம், உயர்கல்வியில் சாதனை படைக்கலாம் என்று பல தரப்பட்ட திட்டங்கள் மூலம் வரலாற்று சாதனை நிகழ்த்தி, கல்வியில் கேரளாவை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திய பெருமை முத்தமிழறிஞர்கலைஞரையே சாரும் என்றால் அது மிகையில்லை.! அவரின் கொள்கைவழியில் மக்களுக்கான திராவிட ஆட்சியை நடத்தி வரும் நம் முதல்வர் - கழகத்தலைவர் தளபதியாரும், 3. கிலோ மீட்டருக்குள் துவக்கப்பள்ளிகள், 8. கிலோ மீட்டருக்குள் ஒரு நிலைப் பள்ளிகள் மாவட்ட தலைநகரங்கள். சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளிலும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி, மருத்துவக்கல்லூரிகள் என உயர் கல்வியை எல்லோருக்கும் கிடைக்கப்பெற வழிவகை செய்து, மேலும் செய்தும் வருகின்றார்.!

ree
ree
ree

சட்டமன்றத்தில் எதார்த்த, இலக்கிய பண்புடன் - நகைச்சுவையுடன் பேசுவது தலைவர்கலைஞரின் தனி சிறப்பு....!

ree

ஒரு மு றை, காமாட்சி என்கிற எம்.எல்.ஏ. பேசும்போது, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து மதிப்பு என்ன? என கேட்க சற்றும் தாமதிக்காமல் அதனைச் சொன்னால் காமாட்சி கோபித்துக் கொள்வார் என்றார் நகைச்சுவையாக , அதே போல நாமக்கல் ஆஞ்நேயர் கோவில் அசையும் - அசையாசொத்து பற்றி ஒரு எம். எல்.ஏ. அவையில் கேள்வி எழுப்ப, வந்து செல்லும் பக்தர்கள் அசையும் சொத்து, அங்கேயே இருப்பது அசையா சொத்து என்றவுடன் அவையில் நகைச்சுவையால் பலத்த கரவோசம் எழுந்தது. அதே போல ஒருவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து என்னென்ன பொருட்க்கள் தயாரிக்கலாம் என்று கேட்க, துறை அமைச்சரோ, 15. வகையான பொருட்கள் தயாரிக்கலாம் எனக் கூறிய, அதனை கவனிக்க தவறிய நிலையில் மீண்டும் அதே கேள்வியை எழுப்ப, சற்றும் தாமதிக்காமல் தலைவர் கலைஞர் காது கேட்கும் கருவியும் கூட தயாரிக்கலாம் என்று நகைச்சுவையுடன் கூற அவையில் சிரிப்புக்கு பஞ்சமில்லா வகையில் ஓசை எழுந்தது.!

ree

பக்தவச்சலம் ஆட்சி காலத்தில், ஒரு சட்டமன்றத்தில் பேசிய பக்தவச்சலம் சரியான எதிர்கட்சி இப்போது இல்லை என்று கூற, அப்போது அவையிலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அசைவினை பார்த்த கலைஞர், கவலைப்படாதீர்கள் இன்னம் ஒரு ஆண்டில் தேர்தல் வருகின்றது. தி.மு.கழகம் மாபெரும் வெற்றிப் பெற்றுஆட்சி அமைக்கும், அப்போது வேண்டுமானால் நீங்களே நல்ல எதிர்கட்சியாகயிருந்து கொள்ளுங்கள் என்றார் அப்போதும் அவையில் பலத்த கரவோசம் எழுந்தது.!

ree

அப்படி , அறிஞர்கள், சான்றோர்கள், என ஒட்டுமொத்த சமூகமே போற்றி புகழும், தனது இளமை காலம் முதல் கடைசிகாலம் வரை தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமத்துவம், தமிழர்களின் நலனுக்காகவே வாழ்ந்த உலகத்தில் ஈடு செய்ய முடியாத ஒப்பற்ற தலைவராக பெருமைகளை பெற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தந்தை பெரியார்,பேரறி ஞர் அண்ணாவின் வழித்தோன்றலாய் வாழ்ந்த தலைவர் கலைஞர்வழியில் ஆட்சி பொறுப்பேற்ற, கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் வாக்களிக்காதவர்களுக்கும் பயனளிக்கும் நல்லதொரு ஆட்சியாகத்தான் இந்த திராவிட மாடல் சமத்துவ ஆட்சி யிருக்கும் என்று சூளுரைத்து அதன் ஆட்சியை அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இந்தியாவிற்கே முன்மாதிரியான ஆட்சியாக நடத்தி வருகின்றார்.!

ree

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், உலக மறை நூல்களும்,கம்பராமாயணம். பெரிய புராணம் போன்ற பல்வேறு நூல்களில் கூறப்பட்ட விளக்க கருத்துக்களைக் மிகவும் எளிமை படுத்தி திருக்குரளில், ஒண்ணா முக்கால் அடியில் சீர்மிகு விளக்கங்களை கூறிய ஐய்யன் திருவள்ளுவரின் பெருமையை உலகறியச்செய்த பத்தாம் வகுப்பு படித்த ஐந்தமிழறிஞர் தலைவர்கலைஞர், இன்று பல்கலைகழகத்தின் பாடமாக திகழுகின்றார். உலகத்தலைவர்களுக்கும், உலகத்திற்கும் முன் உதாராணமாக திகழுகின்றார். இவ்வளவு வரலாற்று சிறப்பு வாய்ந்த தலைவரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமையாக கருதுகிறேன். இவ்வாறாக கொறடா கோ.வி.செழியன்பேசினார்.

ree

தமிழக சட்டப்பேரவைச் செய லாளர். கூடுதல் தலைமைச் செயலாளர். சீனிவாசன்.குளித்தலை நகர தி.மு.கழகச் செயலாளர் எம்.எல்.ஏ. இரா. மாணிக்கம். முன்னால் எம்.எல்.ஏ. தோகைமலை மேற்கு ஒன்றியச்செயலாளர் .இ. ராமர், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி, ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

ree

குளித்தலை மேற்கு ஒன்றியச் செயலாளர் தியாகராஜன்.கிழக்கு ஒன்றியச்செயலாளர் புழுதேரி கோ.இது அண்ணாத்துறை, ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியச்செயலாளர் கதிரவன்.குளித்தலை நகர தி.மு.க துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன். சசிக்குமார்,புத்தூர் தணிகாசலம்உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ree

பள்ளியின் சார்பில் விழா ஏற்பாடுகளை, உதவி தலைமையாசிரியர்கள் கந்தவேல். நஸ் ரீன்,ஆசிரியர்கள் சுரேஷ் குமார், வீரக்குமார் சண்முகநாதன், ரமேஷ். சுப்பையா, சுந்தர சுப்பிரமணியன், ராஜு,சுப்பிரமணியன். செந்தில் முருகன். சங்கீதா தேவி, சித்ரா, ஷாமீலா, திலகவதி, தனலெட்சுமி சுதா, நதியா,உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.



மூத்த பத்திரிக்கையாளர் ராஜா....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page