top of page
Search

கலைஞரின் முதல் தொகுதி குளித்தலை - அய்யர்மலையில் ரோப்கார் திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 25, 2024
  • 1 min read
ree

கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.!

ree
ree

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8.3.2024 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ரூ. 20.30 கோடி செலவில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, மின்தூக்கி, உணவகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட கம்பிவட ஊர்தியானது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.!

ree
ree

இந்த நிலையில் கரூர் மாவட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலையை அடுத்த அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும்.!

இந்நிலையில் வழிபாடு மக்கள், உள்ளிட்ட அனைத்து தரப்புமக்களின் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் (தனது இரு முறை) வலியுறுத்தி முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் பேசினார்.!

இதனையடுத்து, சென்னை மாவட்ட தி.மு.கழகச்செயலாளர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வரின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்டு, ரோப்கார் அமைக்கும் பணிகளை துரிதபடுத்தி, பணிகளையும் முடுக்கியும் விட்டார்.!


இதனையடுத்து ரோப்கார் பணிகள் நிறைவுற்று, பக்தர்கள் பயன்பாட்டிற்கு தயாரானது.!


இந்நிலையில் நேற்று ஜூலை 24. காலை

ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பிவட ஊர்தி சேவையினை தமிழ்நாட்டின் முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி மூலம் துவக்கிதொடக்கிவைத்தார்.!

ree

மேலும் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது.!


மேலும், ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.!


ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் ரூ.9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூலை 24) பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் !


குளித்தலை சட்டமன்ற தொகுதி அய்யர்மலையில் நடைபெற்ற ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில் ரோப்கார் தொடக்க விழாவில், குளித்தலை நகர தி.மு.கழகச்செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், இரா. மாணிக்கம். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, காலக்டர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேன்மொழி,நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, வைகைநல்லூர் ஊராட்சித் தலைவி, சுமதி கோபால், தோகமலை ஒன்றியக் குழுத்தலைவர், சுகந்தி சசிக்குமார்,ஒன்றியச்செயலாளர்கள். தோகமலை : முன்னால் எம்.எல்.ஏ.இ.ராமர், புழுதேரி, அண்ணாத்துறை, குளித்தலை: சந்திரன், தியாகராஜன், மற்றும் வருவாய், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page