கள்ளக்குறிச்சி உயிர் பலி சம்பவம் ! முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை! உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
- உறியடி செய்திகள்

- Jun 21, 2024
- 4 min read

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் அதிரடி நடவடிக்கை! முதல்வரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேரில் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் சிகிச்சைப்பெறுவோருக்கும் ஆறுதல், நிவார உதவிகளை வழங்கி பணிகளை உடன் இருந்து முடுக்கிவிட்டார்.! அமைச்சர்கள், தமிழக அரசுஅதிகாரிகள் பணிகள் துரிதமாக, விரைவுபடுத்தி களத்தில் பணியாற்றியும் வருகின்றனர்.!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 32 பேருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.!

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 42 பேர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், கள்ளக்குறிச்சி மாதவசேரி நாராயணசாமி (65), கருமாபுரம் சுப்பிரமணி (50), வாய்க்கால் மேட்டு தெரு ராமு (50), கருணாபுரம் ஆனந்தன் (50), துருகம் ரோடு ரவி (60), கருணாபுரம் விஜயன்(59), கோட்டை மேடு மனோஜ் குமார் (33), விளான்தாங்கல் ரோடு ஆனந்தன் (47), பழைய மாரியம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் (64), சேஷசமுத்திரம் ராஜா தெரு ராஜேந்திரன்(65) ஆகிய 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.!

மேலும், வீரமுத்து ( 33), சிவா (32), அருள் (38), கிருஷ்ணமூர்த்தி( 55), வீரமுத்து (60), பெரியசாமி( 65), சந்திரசேகர்( 27), செல்வராஜ் ( 57) கலியன் (64), முத்து( 55 ), கணேசன்( 59), சுரேஷ்( 42), சங்கர் ( 38) உள்ளிட்ட 32 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.!



கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 39 பேர் பலியாகினர்.!

உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கோமுகி நதிக்கரையில் ஒரே இடத்தில் இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையின் காரணமாக, ஒரேநேரத்தில் 21 பேரின் சடலங்களும் எரியூட்ட முடியவில்லை.
உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கோமுகி நதிக்கரையில் ஒரே இடத்தில் இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையின் காரணமாக, ஒரேநேரத்தில் 21 பேரின் சடலங்களும் 18 எரியூட்ட முடியவில்லை.!
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உடலாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. !


உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.!
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உடலாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன.!

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.!
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் ..........!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!
உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
“உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமலிருக்கஇது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.!
இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கருணாபுரம் கிராமத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்த கிராமமே ஆழ்ந்த சோகத்தில் காட்சியளிக்கிறது.!
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை
பாதிக்கப்பட்டவர்களுக்காக சிவப்பு (அதிதீவிரம்), மஞ்சள் (ஓரளவு பாதிக்கப்பட்டவர்கள்), பச்சை (லேசான பாதிப்பு) என 3 பிரிவாக வார்டுகள் பிரிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகின்றனர்.!


மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்து 39 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பின்னர், உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.! உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.!



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு,” விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.!

அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முறையாக பணியாற்றி இருந்தால் இப்படி நடந்திருக்காது, எனவே மாவட்ட எஸ்பி-ஐ உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டார். அவர் மட்டுமின்றி துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என இச்சம்பவம் தொடர்பான அனைத்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.!
மேலும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆய்வு செய்து 2 நாளில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.!

விஷச் சாராயம் குடித்த 132 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 27 பேர் குடும்பத்துக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.விஷச் சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.!

வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விஷச் சாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளன. விஷச் சாராய விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அரசு அமைத்துள்ளது,!
இவ்வாறு தெரிவித்தார்

காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றார்கள்.!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டிருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில், மாநகர காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.!

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் தொடர் நடவடிக்கையாக
தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பி செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மதுவிலக்குப் பிரிவை கூடுதலாக கவனிப்பார். கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி, மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.!




Comments