கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 16, ஆக அதிகரிப்பு! கலெக்டர்.எஸ்.பி. போலீஸ் மீது முதல் அதிரடி நடவடிக்கை!
- உறியடி செய்திகள்

- Jun 20, 2024
- 3 min read

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி மற்றும் மதுவிலக்குப் போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.!
ஒரு ஆய்வு பார்வை!
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
தமிழகஅரசை பொறுத்தவரை எல்லா நடவடிக்கையும் அரசு எடுத்திருக்கிறது. அதேநேரத்தில் முதல்வர் காவல்துறை கொஞ்சம் மெத்தனமாக இருந்தது என்பதை அவருடைய அளவுக்கு தெரிந்த காரணத்தினால் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.! இதில் தொடர்புடையவர்கள் யாராகயிருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்!
என்றார் அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 16 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.அவர்களில் பிரவீன்குமார் (26) நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.!

மேலும், சுரேஷ் (40) மற்றும் சேகர் (59) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள் உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும் என்றனர்.!
மேற்கண்ட 26 நபர்களில் வடிவு மற்றும் கத்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.!

இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.!
6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.!

இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.!
மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில் உள்ளது. அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.!

இச்சம்பம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.!

அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். !
தமிழ்நாடு முதல்வர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும், உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.!
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்துள்ளார்.முதல்வரின் எக்ஸ் வலைதளப் பதிவில்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.!


இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.!
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு முதல்வரின் அறிவுறுத்தலின்படி நேரில் ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் செய்தியாளரை சந்தித்தனர். !
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ''கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உள்ளனர். நாங்கள் வரும்பொழுதே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்னென்ன சிகிச்சைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்லாவற்றையும் விசாரித்தோம். நாங்கள் மருத்துவர்களிடம் கேட்கின்ற பொழுது 9 பேர் அபாய நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஸ்டேபிளாக உள்ளார்கள். எப்படியும் எல்லாரையும் காப்பாற்றி விடலாம் என தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.!
அரசை பொறுத்தவரை எல்லா நடவடிக்கையும் அரசு எடுத்திருக்கிறது. அதேநேரத்தில் முதல்வர் காவல்துறை கொஞ்சம் மெத்தனமாக இருந்தது என்பதை அவருடைய அளவுக்கு தெரிந்த காரணத்தினால் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.!

இங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட இதில் ஈடுபட்டுள்ள மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் 10 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மருத்துவர்கள் தேவை என்றால் அனுப்பி வைப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டுகளிலும் இரண்டு டாக்டர்கள் இரண்டு, செவிலியர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சி உள்ளவர்கள் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.!
நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை தயவு தாட்சண்மில்லாமல்அரசாங்கம் எடுக்கும்.''
இவ்வாறு அமைச்சர் கூறினார்.!

முதல்வர் போலீஸிக்கு கொஞ்சம் ஜாஸ்தியா இடம் கொடுத்துட்டாரோ?
தமிழக போலீஸில் எல்லோரும் கெட்டவரில்லை தான்!
அதே சமயம் இச்சம்பவ சமூக விரோதிகள், கொலைகார பாதகர்கள் உள்ளூர் போலீஸார் உளவுத்துறையினருக்கு நிச்சயம் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை!
இது தெரிந்தும், ஸ்டேசனுக்கு ஸ்டேசன் நல்லவர்களாக இருக்கும் போலீஸார் குற்ற சம்மவங்களை ஊக்குவிக்கும் போது தடுக்கவோ - காவல் குற்றவாளிகளுக்கு எதிர்நிலைப்பாடு எடுக்கவோ அந்த ஒரு சில நல்லவர்களுக்கு போதிய அடிப்படை உரிமை, பணி பாதுகாப்பு உள்ளிட்டவைகள் இல்லாததுதான் இது போன்ற சம்பவங்களுக்கான காரணமாக அமைந்து விடுகின்றது.!
கஞ்சா, தடை செய்யபட்ட லாட்டரி, சந்து மதுக்கடைகள், சீட்டாட்ட சிறப்புகள், உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களை போலீஸாரா ஊக்கபடுத்தி, சம்மந்தபட்ட காவல் நிலையங்களிலே ஆவணங்களாக பராமரித்து மாதமாமுலை பெற்றுக் கொண்டு பெயருக்கு ஒரு சில பெட்டி வழக்குகளை போட்டு வருவது கரூர், உள்ளிட்ட பிற பெரும்பாலான மாவட்டங்களில் இன்றைக்கும் நடந்து வருவதும், இதனை பெற வேண்டியதை மாதமா மாதம் பெற்றுக் கொண்டு உறவுத்துறையினரும் கண்டும் காணாமல் ஊக்கப்படுத்துவதுதான் ஆட்சியாளர்கள் கள்ளக்குறிச்சி போன்ற சமூக விரோத செயல்பாடு சமபவங்களுக்கு பதலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.!
என வேதனையுடன் சமூகநீதி, அரசியல், பத்திரிக்கை, ஆர்வலர்கள் கூறுகின்றனர்.!
இனியாவது கவனிப்பாரா தமிழக முதல்வர்!
மணவை லெமூரியன்
.




Comments